உயிர் மூச்சு

ஞெகிழி பூதம் 13: புரிந்துகொள்ளச் சில புத்தகங்கள்

கிருஷ்ணன் சுப்ரமணியன்

ஞெகிழி

ஞெகிழி ஒரு செயற்கை வேதிப் பொருள். அதை எப்படித் தயாரிக்கிறார்கள், அதன் வேதித்தன்மை எப்படிப் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல, அதனால் புவிக்கும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை எளிய தமிழில் எடுத்துரைக்கும் புத்தகம்.

நெடுஞ்செழியன் தலைமையிலான ‘பூவுலகின்நண்பர்கள்’ அமைப்பினர் 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது. ஞெகிழியைப் பற்றிப் புரிந்துகொள்ளத்தமிழில் வந்த முதல் புத்தகமாகக் கருதப்படுகிறது.

வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்

பிளாஸ்டிக் காலம்

கற்காலம், செப்புக் காலம், வெண்கலக்காலம், இரும்புக் காலம் என்று பல காலத்தைக் கடந்து வந்த மனித இனம், இப்போது பிளாஸ்டிக் காலத்துக்கு வந்து சேர்ந்த கதையையும், அதனால் நாம் படும் பாடுகளையும் இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். நூல் ஆசிரியர், இந்தியா முழுவதும் குப்பையை உருவாக்கும், கையாளும் முறைகளை ஆவணப் படமாக்கி வருபவர்.

விஷ்ணுப்ரியா, தன்னறம் பதிப்பகம்

ஞெகிழி-பூதம்ஞெகிழி பூதம்

ஞெகிழியின் விஷத்தன்மையால் நீர், நிலம், காற்றுக்கு என்ன பாதிப்பு என்பதை அலசுகிறது. மேலும், ஞெகிழி சார்பிலிருந்து நாம் விடுபட மேற்கொள்ளவேண்டிய உத்திகளையும் விளக்குகிறது.

ஞெகிழியை எதிரி என்ற பார்வையில் அல்லாமல், நாம் எப்படி அதைத் தவிர்ப்பது, கையாள்வது என்ற தெளிவைத் தர முயல்கிறது.

கிருஷ்ணன் சுப்ரமணியன், இயல்வாகை வெளியீடு

ஞெகிழியா, நெகிழியா?

இன்றைக்கு ஞெகிழி, நெகிழி என்ற இரண்டு சொற்கள் ஞெகிழி-பூதம்right பிளாஸ்டிக்குக்குத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ‘ஞெகிழி’ என்ற தமிழ் புத்தகமே.

நெகிழ்ந்து கொடுப்பதையும் தாண்டிய சில அம்சங்கள் பிளாஸ்டிக்குக்கு உள்ளதால், ஞெகிழி என்ற பெயர் அந்தப் புத்தகத்தில் முன்மொழியப்பட்டது.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

SCROLL FOR NEXT