உயிர் மூச்சு

பிளாஸ்டிக் மாற்றாக ஓலைப் பெட்டி

என்.சுவாமிநாதன்

அரசு ஞெகிழிப் பயன்பாட்டுக்குத் தடைவிதித்துள்ள நிலையில் அந்ததந்தப் பகுதிகளில் கிடைக்கும் பாரம்பரியமான பொருள்களையே மாற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் வியாபாரிகள். பனைஓலை பெட்டிகளும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பல குடும்பங்களும் பனை ஓலைப் பெட்டித் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. திருநெல்வேலியில் சில அல்வாக் கடைகளிலும் இப்போது பனை ஓலைப் பெட்டியைப் பயன்படுத்தும் பழக்கம் உருவாகியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக திருநெல்வேலியில் மீரான் சிக்கன்ஸ் என்னும் கோழிக்கடையில் கடந்த இரு ஆண்டுகளாகவே பனை ஓலைப் பெட்டியில்தான், வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி வழங்கி வருகின்றனர். இப்போது இதை நெல்லையில் வேறு சில இறைச்சி கடைகளும் பின்பற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

SCROLL FOR NEXT