ஆப்பிரிக்காவில் கடந்த நூறு ஆண்டுகளாகக் கருஞ்சிறுத்தையின் தடமே இல்லாமல் இருந்தது. சிறுத்தைகளின் உடலில் ஏற்படும் நிறமிக் குறைபாட்டால் கருஞ்சிறுத்தைகள் தப்பிப் பிறக்கின்றன. இந்நிலையில் கென்யாவில் உள்ள லைகீபியா காட்டுப் பகுதியில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, லைகீபியா காட்டுப் பகுதியில் காட்டுயிர் ஆய்வாளர் நிக்கோலஸ் பில்ஃபோல்ட் தலைமையிலான குழுவினர் கடந்த ஓராண்டாக முகாமிட்டு இருந்தனர். அவர்களுடைய காத்திருப்புக்குப் பலன் அளிக்கும் வகையில் அரிய வகை கருஞ்சிறுத்தை, காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் பரார்டு லூகாஸ் வைத்திருந்த கேமரா பொறியில் கடந்த வாரம் பதிவானது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் கருஞ்சிறுத்தைகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த ஒளிப்படம் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.பரார்டு லூகாஸ்