ஆரோக்கியமான இயற்கை வேளாண் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று இன்றைக்குப் பலரும் நினைக்கிறார்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரசாயனமில்லாத உணவு வகைகளை விற்பனை செய்யும் பசுமை அங்காடிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உயிர்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சென்னையில் அனைத்து இடங்களுக்கும் இயற்கைத் தயாரிப்பு உணவு வகைகளை ஹோம் டெலிவரி செய்கிறது தளிர் இயற்கை அங்காடி. சென்னைதான் என்றில்லை, பெங்களூர், ஹைதராபாத்துக்கும் இவர்களுடைய தயாரிப்புகளை வரவழைக்கலாம்.
இணையதளத்தில் இவர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிலேயே ஆர்டர் கொடுத்து, வாங்கவும் முடியும். நேரில் சென்று வாங்க நினைப்பவர்கள் சென்னை முகப்பேரில் உள்ள தளிர் இயற்கை அங்காடியை நாட வேண்டும்.
அரிசி, பருப்பு, சிறுதானியம், அவல், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய், இயற்கை இனிப்புகள், நறுமண - மசாலாப் பொருட்கள், பால் பொருட்கள், ஆரோக்கிய பானங்கள், ஆரோக்கியத் துணைப்பொருட்கள், நொறுக்குத்தீனி, சேமியா, ஊறுகாய், மாவு, வற்றல், தேநீர் என அனைத்து உணவுப் பிரிவுகளிலும் பல்வேறு வகைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.
பட்டதாரிகளான இந்தக் கடையை நடத்துபவர்களின் சிறப்பே இயற்கை விவசாயத்தை அவர்களே மேற்கொள்வதும், மூலிகை ஜூஸ் தயாரிப்பதும்தான். எதிர்காலத்தில் பெரும்பாலான பொருட்களைச் சுயமாகத் தயாரித்து விற்பனை செய்வது தான் இவர்களுடைய திட்டம்.
"இயற்கை விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகின்றன. அவர்களிடம் காய்கறி, பழங்கள் , அரிசி போன்றவை கிடைக்கும். குக்கீஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளைப் பிராண்டட் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறோம். இரண்டு வகைப் பொருட்களை யும் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார் கடை உரிமையாளர் பானு பிரசாத். சிறப்பு வாய்ந்த பொருட்கள்: செக்கில் ஆட்டப்பட்ட எண் ணெய், வகைவகையான அரிசி
தொடர்புக்கு: 9710701020
www.thalirorganic.com