உயிர் மூச்சு

சேலத்தில் ஏப். 21 பறவை நடை

செய்திப்பிரிவு

8 ஊர்களில், 8 பறவை நடைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களான அகர்தலா, மைசூரு, பனாஜி, கொல்கத்தா, ஸ்ரீநகர், திருப்பதி, புதுடெல்லி ஆகியவற்றுடன் சேலத்திலும் இந்தப் பறவை நடை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

காலை 6.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் பறவை நடைகளில் 10-13 வயதுள்ள குழந்தைகள் பங்கேற்றுப் பறவைகளை அடையாளம் காணலாம்.

பறவைகளின் வாழிடம், அவற்றின் செயல்பாடுகள், வாழ்க்கை சுழற்சி பற்றி அறிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்கான விளையாட்டுகள், செயல்பாடுகளும் இருக்கும்.

குழந்தைகளுக்கு இயற்கையியலாளர்கள் வழிகாட்டுவார்கள். சேலம் பூலவாரி ஏரியில் நடைபெறும் பறவை நடையை சேலம் பறவையியல் அறக்கட்டளை ஒருங்கிணைக்கிறது.

பதிவுசெய்ய / மேலும் தகவலுக்கு: https://bit.ly/8walks

SCROLL FOR NEXT