உயிர் மூச்சு

கான்க்ரீட் காட்டில் 13: வலையில் சிக்காத சிலந்தி

ஆதி வள்ளியப்பன்

சி

லந்தி என்றாலே வலை பின்னி இரையைப் பிடிப்பது என்றுதான் பொதுவாக நம்புகிறோம். எல்லா சிலந்திகளும் வலை பின்னி இரையைப் பிடிப்பதில்லை. வலை பின்னி இரையைப் பிடிக்கும் சிலந்திகள் இவற்றிலிருந்து வேறுபட்டவை. மற்ற சிலந்திகளுடன் ஒப்பிடும்போது இவை சற்றே பருமனாகத் தோற்றமளிக்கும்.

வட்ட வடிவத்தில் சக்கரத்தைப் போன்று இவை பின்னும் வலைகளை தோட்டங்கள், வயல்கள், காடுகளில் பார்க்கலாம். நகர்ப்புற, கிராமப்புறத் தோட்டங்கள், வீடுகளில் இவை வாழும். நாடெங்கும் தென்படக் கூடியது.

வலை பின்னாத குதிக்கும் சிலந்திகள், பதுங்கியிருந்து பூச்சியை வேட்டையாடும் சிலந்திகள் போன்றவற்றை எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன். படத்தில் காணப்படுவது எங்கள் வீட்டில் தென்பட்ட வலைச் சிலந்தி.

இது வட்ட வடிவத்தில் வலை பின்னும் ஒரு வகை OrbWeaver சிலந்தி. ஒரு செ.மீ. நீளத்துடன் இருக்கும். இதன் வயிற்றில் உள்ள முத்திரைகள் இவற்றை அடையாளம் காணப் பயன்படுகின்றன. ஓய்வெடுக்கும்போது கால்களை உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உருண்டையாகத் தோற்றமளிக்கும்.

16CHVAN_Concrete13__2_.jpg

‘ஆர்ப்’ என்றால் வட்ட வடிவம் என்று அர்த்தம். இந்த வகைச் சிலந்திகள் பின்னும் வலையில் எல்லா இழைகளுமே ஒட்டக்கூடியவை அல்ல. இரையைப் பிடிக்கும் இழை ஒட்டக்கூடியதாகவும், அதற்கடுத்தபடியாக சிலந்தி நகர்ந்து செல்ல உதவியாக ஒட்டாத இழையும் இருக்கும். எப்போதும் ஒட்டாத இழையிலேயே கவனமாகக் கால் வைத்து சிலந்தி செல்லும்.

பொதுவாக இதுபோன்ற சிலந்திகள் வலைக்கு வெளியே அல்லது வலையின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். இரை அகப்பட்டவுடன் வலையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்துகொண்டு ஓடிவந்து இரையைப் பிடித்து சிலந்தி உண்ணும்.

SCROLL FOR NEXT