கல்வி - வேலை வழிகாட்டி

ஆட்டோமொபைல் துறையின் புது முகம் | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ இறுதியாண்டு முடிக்க உள்ளேன். கேம்பஸ் தேர்வுகள் சரிவர இன்னும் நடைபெறவில்லை. எனக்கு நல்ல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை கிடைக்க வழி சொல்லுங்கள். - வீரராகவன், பெரியபாளையம்.

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மனித நாகரிகம் மெல்ல மெல்ல முன்னேற்றப் பாதையில் நகரத் தொடங் கியது. இதன் நீட்சியாக மாட்டுவண்டி, குதிரைவண்டியிலிருந்து இன்று நாம் மோட்டார் வண்டிகளையும் புல்லட் ரயில்களையும் காண்கிறோம்.

கடந்த நூறு ஆண்டுகளில் மோட்டார் வாகனத் தின் வளர்ச்சியே பிரமிக்க வைக்கிறது. பெட்ரோல், டீசல் கடந்து இன்று ஹைபிரிட், மின்சார வாகனங்கள்வரை வந்து இன்னும் சில காலத்தில் ஹைட்ரஜன் வாகனங்கள் எனக் காண இருக்கிறோம்.

வாகனங்கள் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியப் பொருளாக உரு மாற்றம் பெற்றுள்ளமையால், மனித வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. தமிழ்நாடு இன்று மோட்டார் வாகன உற்பத்தியில் மையப் புள்ளியாக விளங்குகிறது.

எனவே, வாய்ப்புகள் அதிக மாகவே உள்ளன. இதற்கு நீங்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொண்டால் வேலை பெறுவது உறுதி. பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் உற்பத்தி திறன்களுடன் இனி வரும் காலங்களில் முக்கிய அங்கமாக மாறப்போகும் மின்சார வாகனங்கள், மென்பொருள் அடிப்படையில் இயங்கும் வாகனங்கள், உயர் திறன் பாட்டரிகள், எலக்ட்ரிக் மோட்டார் கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முக்கியப் பிரிவுகளில் நீங்கள் திறன் பயிற்சிகளைப் பெறவேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

இவையே இனி மோட்டர் உலகை ஆளப்போகின்றன. இந்த மாற்றங்களின் அடிப்படையில், புதிய பணித்திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட வாகனங்களுக்கான மின்கல அமைப்புகளை வடிவமைக்கும் மின்கல அமைப்பு பொறியாளர்கள், அவற்றின் செயல்திறன், வெப்பநிலையைக் கண் காணிக்கும் வெப்ப மேலாண்மை நிபுணர்கள், குளிரூட்டும்/வெப்பப்படுத்தும் அமைப்புகளில் திறன் பெற்ற தொழில் நுட்ப நிபுணர்கள், மின்சார வாகனங் களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு பொறியாளர்கள், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் தொடர்பான மென்பொருள் வடிவமைப்பாளர்கள், செயற்கை நுண் ணறிவுத் திறன் பெற்ற பணியாளர்கள், வாகன மென்பொருளுக்கான இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், மென்பொருள் - மின்னணு அமைப்புகளை ஒருங்கிணைக் கும் பொறியாளர்கள், மின்சார வாகன இயக்க அமைப்பு பொறியாளர்கள் போன் றோருக்கான தேவை அதிகரித்துள்ளது.

அதேபோல் தெர்மோ டைனமிக்ஸ், ஃபுளூயிட் டைனமிக்ஸ், பிஎல்சி புரோகிராமிங், ரோபாட் பராமரிப்பு, மெக்கட் ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட் ரிக்கல் சேஃப்டி புரோட்டோகால்ஸ், யூசர் ஜர்னி மேப்பிங் போன் போன்ற துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இப்பிரிவுகளில் தனித்திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு, மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங் களில் எதிர்கால வேலைவாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளன. மேலும், மோட்டார் வாகனத் துறையை மைய மாகக் கொண்டு குறுகிய காலத் திறன் பயிற்சிகளும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில உங்களுக்காக: அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், ஆட்டோ பாடி ரிப்பேர், ஆட்டோ மோட்டிவ் ஏசி டெக்னீஷியன், எலக்ட்ரிக் வாகன பாட்டரி ஸ்வாப்பிங் சிஸ்டம், பிளானிங் இன்ஜினீயர், ஆட்டோ மோட்டிவ் டூல் ரூம் டெக்னீஷியன், ஆட்டோமோட்டிவ் வெல்டிங் டெக்னீஷியன், எலக்ட்ரிக் வாகனப் பராமரிப்பு, சி.என்.சி லெவல் 2 போன்றவை.

இவை ஏ.எஸ்.டி.சி எனப்படும் மத்திய அரசின் ஆட்டோமோட்டிவ் ஸ்கில் டெவலப் மெண்ட் மையத்தால் வழங்கப்படு கின்றன. அதேபோல் நான்கு நாள் பயிற்சிகளாக ஆட்டோமோட்டிவ் எம்பெட்டட் சிஸ்டம், கேன் (CAN) கம்யூனிகேஷன், மாடல் பேஸ்டு டிசைன் போன்ற பயிற்சிகள், திறன் இடைவெளியைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் 70% செய்முறை பயிற்சியும், மீதம் கோட்பாட்டுப் பயிற்சியும் வழங்கப் படுகிறது. இதற்கான சேர்க்கைத் தகுதிகளாக பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளில் ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.சி.இ, மெக்காட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பில் எலக்ட் ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் எலக்ட் ரானிக்ஸ் படித்திருக்க வேண்டும். இல்லையெனில் டிப்ளமோ இன் ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.சி.இ போன்ற பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

இப்பயிற்சிகள் நாட்டின் புகழ்பெற்றபிட்ஸ் பிலானி கல்வி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், ஆட்டோ மொபைல் துறையுடன் இணைந்து சென்னையில் வழங்கப்படுகின்றன. மேற்கூறிய பயிற்சிகளில் உங்களின் விருப்பத்துக்கு ஏற்பத் தேர்வுசெய்து திறனை மேம்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பு களைப் பெறலாம்.

SCROLL FOR NEXT