கல்வி - வேலை வழிகாட்டி

மருத்துவம் சார்ந்து பட்டயப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

என் மகன் இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான். கணிதம், உயிரியல் பிரிவைத் தேர்வு செய்துள்ளான். நான் விவசாயி. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மருத்துவம் அல்லது இன்ஜினீயரிங் துறையில் டிப்ளமோ படிக்கலாமா? எனக்கு வசதி இல்லை. விவரங்களைத் தெரிவியுங்கள். - மு.சுடலைமுத்து, முதுகுளத்தூர்.

உங்கள் மகன் கணிதம், உயிரியல் பிரிவை எடுத் துள்ளதால் மருத்துவம், பொறியியல், வேளாண்மைத் துறை குறித்த டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம். இவை குறித்துப் பொதுவான தகவல் உங்களுக்காக: மருத்துவம் சார்ந்த துறைகளில் பட்டயப் படிப்புகள் அதிகமாக உள்ளன.

கார்டியோ சோனோகிராபி தொழில்நுட்பப் பணியாளர் (ஓராண்டு), பம்ப் தொழில் நுட்பப் பணியாளர், எமர்ஜென்சி கேர் தொழில்நுட்பப் பணியாளர், டயாலிசிஸ் தொழில்நுட்பப் பணியாளர், அறுவைசிகிச்சை அரங்கத் தொழில்நுட்பப் பணியாளர், இசிஜி தொழில்நுட்பப் பணியாளர், கார்டியோ கத்தெட்டரைசேஷன் ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர், ரெஸ்பிரேட்டரி தெரபி தொழில்நுட்பப் பணியாளர், ஆர்தோபெடிக் தொழில்நுட்பப் பணியாளர், கிளினிக்கல் தெரபாட்டிக் நியூட்ரிஷன் - ஃபுட் சர்வீசஸ், இ.இ.ஜி / இ.எம்.ஜி டெக்னிஷியன் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இவை தவிர டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ இன் ரேடியோ டயக்னோசிஸ், மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிஷியன், ஹோம் ஹெல்த் கேர், டிப்ளமோ இன் ரேடியோதெரபி டெக்னிஷியன், டிப்ளமோ இன் ஆப்தல்மிக் நர்சிங் அசிஸ்டென்ட், டிப்ளமோ இன் பிசியோதெரபி அசிஸ்டென்ட், சைக்கியாட்ரிக் சப்போர்ட் ஒர்க்கர், டிப்ளமோ இன் ஆக்குபேஷனல் தெரபி, டிப்ளமோ இன் டார்க் ரூம் அசிஸ்டென்ட், டிப்ளமோ இன் மெடிக்கல் இமேஜிங் டெக்னி ஷியன், டிப்ளமோ இன் ரூரல் ஹெல்த் கேர், டிப்ளமோ இன் பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மல்டிபர்பஸ் ஹெல்த் அசிஸ்டென்ட், டிப்ளமோ இன் பிளட் பேங்க் டெக்னாலஜி, டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் ஹெல்த் கேர், டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மசி, டிப்ளமோ இன் வெட்னரி அசிஸ்டென்ட், டிப்ளமோ இன் அனிமல் ஹெல்த் கேர் ஒர்க்கர், டிப்ளமோ இன் டயரி டெக்னாலஜி, டிப்ளமோ இன் வெட்ரினரி லேப் டெக்னிஷியன், வேளாண்மையில் டிப்ளமோ, டிப்ளமோ இன் ஹார்டிகல்சர், டிப்ளமோ இன் அக்ரிகல்சர் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகளும் இருக்கின்றன.

வேளாண்மை, துணை மருத்துவம், கால்நடை மருத்துவம் தொடர்பான பட்டயப் படிப்புகளைத் தவிர பொறியியலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகள் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்கு வதை அறிவோம்.

வேலைவாய்ப்புள்ள சிறப்பு டிப்ளமோ படிப்புகளை நெட்டூர் டெக்னிக்கல் டிரெயினிங் ஃபவுண் டேஷன் (NTTF) வழங்குகிறது. டிப்ளமோ இன் டூல் இன்ஜினீயரிங் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்டு எம்பெடட் சிஸ்டம்ஸ், டிப்ளமோ இன் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் அண்டு ஸ்மார்ட் ஃபேக்ட்டரி, டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி அண்டு ஐ.டி இன்ஃப்ராஸ்டிரக்சர், டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்.

இவையாவும் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவை. உங்களுக்காகப் பட்டயப் படிப்புகளின் கழுகுப் பார்வையாக விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை உங்களின் விருப்பத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கலாம்.

SCROLL FOR NEXT