திசைகாட்டி

வகை வகையாக வேலை தரும் ஏ.ஐ.! | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பத் துறையில் உள்ள முக்கிய வேலை வாய்ப்புகள் என்ன? - சோமசுந்தரி, தருமபுரி

உலகில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறைகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஏ.ஐ. தொழில் நுட்பம். அனைத்துத் துறைகளிலும் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை வளர்ந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

சில வளர்ந்த நாடுகளில் போக்குவரத்து சிக்னலில் உள்ள கேமராக்கள் வாகன ஓட்டிகளையும் கண்காணிக்கின்றன. தேவைப்படும்போது அவர்களின் முகப்பதிவு குற்றப் பதிவேடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பொது வெளியில் உலா வருவது கடினம்.

அதுபோல நம் நாட்டிலும் வீட்டி லேயே பல நுழைவுத் தேர்வுகளைக் கணினி மூலம் எழுத முடிகிறது. தேர்வின்போது தேர்வர்கள் தவறு செய்வதைக் கண்காணிக்க முடிகிறது. இன்றைக்கு அறுவைசிகிச்சைகளில் ஏ.ஐ. முக்கியப் பங்கை வகிக்கிறது.

சிதைந்த உறுப்புகளை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை முதல் பல்வேறு அறுவைசிகிச்சைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. இனி வரும் காலத் தில் நாட்டின் பாதுகாப்புப் பணிகளில், ‘Electronic warfare’ எனப்படும் மின்னணுவியல் போரில் ஏ.ஐ. முக்கியப் பங்காற்றும்.

ஏ.ஐ. துறை தொடர்பாகப் பணி யாற்றுவதற்கான நூற்றுக்கணக்கான பணியிடங்கள் உருவாகின்றன. அவற்றில் சில:

தரவு அறிவியலாளர் (Data Scientist): சிக்கலான கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வுசெய்து அதன் மூலம் தக்க முடிவுகளைத் தொழில் நிறு வனங்களின் செயல்பாட்டுக்காகவும் புதிய வாய்ப்புகளை அறியவும் உதவுபவர்.

என்.எல்.பி. பொறியாளர் (Natural Language Processing Engineer): மனிதர்கள் பேசும் மொழிகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மொழிபெயர்ப்பு அல்லது பதில்களை வேற்று மொழியில் வழங்குவது குறித்த கட்டமைப்புகளை உருவாக்குபவர்.

ஏ.ஐ. இன்ஜினீயர் (A.I. Engineer): ஏ.ஐ. குறித்த கட்டமைப்பு, செயல் பாடுகளை வடிவமைப்பவர். இயந்திரக்கற்றல் (Machine Learning) பொறி யாளர் - செயல்திறன், செயல்பாடுகள் குறித்த அல்காரிதம் கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டும். கணினி விஷன் இன்ஜினீயர் (Computer vision engineer) - காட்சி வடிவத் தரவு களை ஆய்வுசெய்து கணித்து, உரிய பதில்களை வழங்கும் வகையிலான மென்பொருளை வடிவமைப்பவர்.

ஏ.ஐ. புராடெக்ட் மேலாளர் (A.I. Product Manager): ஏ.ஐ. குறித்த கருப்பொருளை உள்ளடக்கிய புதிய தயாரிப்புகளை உருவாக்கி முழுமை பெற்ற பொருளாக நுகர்வோரைச் சென்றடைய வைப்பது வரை இவர் பங்களிப்பு உள்ளது.

ரோபாடிக் பொறியாளர் (Robotic Engineer): ஏ.ஐ. செயல்திறனை அடிப்படை யாகக் கொண்டு செயல்படக்கூடிய தானியங்கி இயந்திரங்களை வடிவமைப்பவர். மனிதர்களால் இயலாத

சில வேலைகள், உதாரணமாக ஆழ் கடல் ஆராய்ச்சி, நச்சுத்தன்மையுள்ள இடங்களில் செயல்படுவது, மிகப்பெரிய இயந்திரங்களைக் கட்டுப்பாட் டுடன் இயக்குவது (சுரங்கங்களில்) போன்றவை.

ஏ.ஐ. ஆராய்ச்சியாளர் (A.I. Researcher): ஏ.ஐ. அறிவியல் குறித்த ஆராய்ச்சி களை மேற்கொண்டு, அதற்கான ஆராய்ச்சி வெளியீடுகளை அளிப்பவர்.

எஃப்.எல். ஆப்ஸ் இன்ஜினீயர் (Field Applications Engineer): தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்து இயந்திரக் கற்றல் மாதிரிகளைத் தயாரித்து வழங்குபவர். வருங்காலத் தலைமுறையினரை இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயார் செய்யப் பள்ளிகளிலேயே ஏ.ஐ. குறித்து விழிப்புணர்வையும் பாடத்திட்டங்களை வழங்கும் முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT