தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். சென்னையில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது.
கட்டணமில்லா பயிற்சி விவரம்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆறு மாத காலப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
தகுதி:
பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 2023 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளமான www.civilservicecoachingcom மூலம் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதி:
விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்புக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்படும். பயிற்சிக்குத் தேர்வானவர்கள் அழைப்புக் கடிதத்ததைப் பதிவிறக்கம் செய்து எடுத்துச் செல்ல வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.civilservicecoaching.com/posts/14-03-2023-1678833928.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.