தேசிய தகவல் மையத்தில் விஞ்ஞானி, அறிவியல் அலுவலர், பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
விஞ்ஞானி - 71
அறிவியல் அலுவலர் / பொறியாளர் - 196
தொழில்நுட்ப உதவியாளர் - 331
மொத்தக் காலிப்பணியிடங்கள்: 598
தகுதி:
அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்குத் தொடர்புடைய படிப்பில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிகளுக்கான கல்வித்தகுதி பற்றிய விரிவான தகவல்களுக்குத் தேசிய தகவல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 2023 ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.calicut.nielit.in/nic23/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.800/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு மையம்:
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு https://www.calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.