திசைகாட்டி

வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வோருக்கு உதவித்தொகை: உடனே விண்ணப்பியுங்கள்

ராகா

வெளிநாடுகளில் கல்வி கற்கும் பட்டியலின வகுப்பு, சில பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள், நிலமற்ற விவசாய கூலிகள், பாரம்பரிய கைவிணைஞர்கள் போன்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் 125 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித் தொகை திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தகுதி: விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதுகலை அல்லது பி.எச்டி படித்துகொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப வருமாணம் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.எச்டி பயிலும் மாணவர் முதுகலை பட்டப்படிப்பிலும், முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர் இளங்கலை பட்டப்படிப்பிலும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31, 2023

விண்ணப்பிக்கும் முறை: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் விண்ணபிக்கலாம். (http://www.nosmsje.gov.in/)

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்: விண்ணப்பதாரரின் ஒளிப்படம், குடும்ப வருமானச் சான்றிதழ், பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதுகலை அல்லது பி.எச்டி படிப்பில் இணைந்ததற்கான ஒப்புகைச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

எந்தெந்தக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம், தேவையாண ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்துக்குப் பிறகு உதவித் தொகை பெறுவது தொடர்பான தகவல் என அனைத்து விவரங்களையும் https://nosmsje.gov.in/(X(1)S(2rte2yskqbnncyvt5uou3p1q))/docs/NOSGuidelines.pdf என்கிற தளத்தில் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT