டிச.22: தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகை செய்யும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து மா நிலங்கள வையிலும் நிறைவேறியது.
டிச.23: காளையார்கோவில் போரை முன் வைத்து எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. ‘யாத் வஷேம்’ என்ற கன்னட நூலை மொழி பெயர்த்த கே. நல்லதம்பிக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது.
டிச. 24: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘இன்கோவக்’ தடுப்பு மருந்தை 3ஆவது தவணையாக (பூஸ்டர்) மூக்கு வழியாக செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டிச.24: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹேமந்த் குப்தா, டெல்லியில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்
டிச.26: தமிழகத்தில் சிலைக் கடத்தலைத் தடுக்க முதன்முறையாக ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிச.30: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (99) உடல் நலக் குறைவால் அகமதாபாத்தில் காலமானார்.
டிச.30: பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் ‘பீலே’ என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெஸ் டு நசிமெண்டோ (82) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.