நவீன இந்தியா - பகுதி 2
(பொ.ஆ.1885 வரை)
பிரிட்டிஷ் தலைமை ஆளுநர்கள் மற்றும் அரசப்பிரதிநிதிகள் (பொ.ஆ. 1885வரை)
கவர்னர் ஜெனரல்கள்
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1773 - 1785). இந்தியாவின் ஆட்சி முறைக்காக இங்கிலாந்து நாடாளுமன்றம் வெளியிட்ட முதல் சட்டம் ஒழுங்குமுறைச் சட்டம் (1773). இச்சட்டத்தின்படி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி ஏற்பட்டது. ஒழுங்கு முறைச் சட்டத்தில் காணப்பட்ட குறைகளை நீக்க பிட் இந்திய சட்டம் கொண்டுவரப்பட்ட வருடம்
பொ.ஆ.1784.
வாரன் ஹேஸ்டிங்ஸ் குற்ற விசாரணைக்கு உட்படுத்த காரணமாக இருந்த போர்
ரோகில்லா போர் (1774).
வங்காளம் மற்றும் பிஹார் பகுதிகளில் பொ.ஆ.1793இல் நிரந்தர நிலவரித்திட்டத்தை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ்
(1786 -93) ஆவார்.
காரன்வாலிஸ் அறிமுகப் படுத்திய துறைகள்
சிவில் சர்வீஸ் துறை மற்றும்
காவல்துறை உருவாக்கம்.
தலையிடாக் கொள்கையை பின்பற்றிய கவர்னர் ஜெனரல்
சர் ஜான் ஷோர் (1793-98).
துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
மார்னிங்டன் பிரபு என்ற இயற்பெயர் கொண்ட
வெல்லெஸ்லி (1798-1805).
துணைப்படைத் திட்டத்தில் முதன்முதலாகக் கையெழுத்திட்டவர்
ஹைதராபாத் நிஜாம் (1798) ஆவார்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அக்பர் என அழைக்கப்படும் கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி.
சென்னை மாகாணத்தை உருவாக்கியவரும் அவரே.
வேலூர் புரட்சி பொ.ஆ.1806 நடந்தபோது கவர்னர் ஜெனரலாக
ஜார்ஜ் பார்லோ (1805-07) செயல்பட்டார். அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு. அமிர்தசரஸ் உடன்படிக்கையில் பொ.ஆ.1809 இல் ஒப்பந்தம் செய்த கவர்னர் ஜெனரல்
மிண்டோ (1807-13).
1813 பட்டயச் சட்டத்தின்படி கல்விக்காக ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் ஏழாண்டுப் போரிலும் பங்கேற்ற கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் (1813-23). அவர் பிண்டாரிகளை பொ.ஆ.1817 ஆம் வருடம் ஒழித்தார். இவரது காலத்தில்தான் வங்காளத்தில் முதன்முதலாக இந்திய மொழி பத்திரிகை ‘சமாச்சார் தர்பன்’ தொடங்கப்பட்து. பொ.ஆ .1820 இல் ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்தவர் அப்போதைய
சென்னை மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோ.
முதல் பர்மியப்போர் நடந்த வருடம் பொ.ஆ. 1824. யாண்ட்பூ உடன்படிக்கை (1826)யின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
ஹம்ஹெர்ஸ்ட் (1823-28)
முதன்முதலாக இந்தியர்களைப் பணியில் அமரத்திய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் (1828-1834). அவர் மெக்காலே பிரபுவின் உதவியுடன் ஆங்கில மொழியை ஆட்சி மொழியாக அறிவித்த வருடம் பொ.ஆ. 1833.
புனேயில் எல்பின்ஸ்டன் ஆங்கில கல்லூரியும் கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரியும் திறக்கப்பட்ட ஆண்டு பொ.ஆ.1835.
சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பெண்டிங் தடைசெய்த வருடம் பொ.ஆ. 1829. தக்கர்களை ஒழித்த கவர்னர் ஜெனரலும் அவரே.
கிராண்ட்டிரங் (GT) சாலை கல்கத்தா முதல் டெல்லி வரை போடப்பட்டபோது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
ஆக்லாந்து (1836-42).
அவகாசியிலிக் கொள்கை அல்லது வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
டல்ஹௌசி (1848-56).
புதிய சேவைகள், நவீனத் திட்டங்கள்
பொ.ஆ.1851 இல் முதல் தந்தி சேவை கிழக்கிந்திய கம்பெனியின் பயன்பாட்டிற்காக கல்கத்தா முதல் ஆக்ரா வரை தொடங்கப்பட்டது. பொ.ஆ.1853 இல் முதல் இந்திய ரெயில் பாதை பம்பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது. பின் பொ.ஆ 1854 இல் ஹௌரா மற்றும் இராணிகஞ்ச் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இரெயில் பாதை போடப்பட்டது.
டல்ஹௌசி காலத்தில் சென்னை இராயபுரம் முதல் அரக்கோணம் வரை ரயில் பாதை பொ.ஆ. 1856 ஆம் வருடம் அமைக்கப்பட்டது.
ரூர்க்கியில் பொறியியல் கல்லூரியை டல்ஹௌசி நிறுவினார். உட்ஸ் தனது கல்வித் திட்டத்தை பொ.ஆ.1854 இல் டல்ஹௌசியிடம்அளித்தார்.
அரை அணா தபால் முறையை அறிமுகப்படுத்திய டல்ஹௌசி கீழைநாட்டு ஆபிரகாம் என அழைக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்ட்ரு பிரௌன் ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹௌசி விதவைகள் மறுமணச் சட்டத்தை பொ.ஆ. 1856 இல் இயற்றினார்.
இந்தியாவின் முதல் அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்) கானிங் பிரபு. இவரது ஆட்சிக் காலத்தில் முதல் இந்திய சுதந்திரப் போர் 1857 இல் சிப்பாய் மங்கள்பாண்டேவால் தொடங்கப்பட்டது. அதே வருடம் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலை கழகங்கள் தொடங்கப்பட்டன. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை 01-11-1958 அன்று பிரகடனம் செய்யப்பட்டது.
வாரிசு இழப்புக் கொள்கை கைவிடப்பட்டது. பொ.ஆ.1859இல் இந்திய தண்டனைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய அரசமைப்பில் முக்கியமாக கருதப்படும் இந்திய கவுன்சில் சட்டம் 1861 இவரது காலத்தில் இயற்றப்பட்டது.
நீதிமன்றம், சிவில் சர்வீஸ், தொழிற்சாலை
ஜான் லாரன்ஸ் (பொ.ஆ. 1864-69) அரசப்பிரதிநிதியாக இருந்தபோது பொ.ஆ.1864இல் பம்பாய், கல்கத்தா, சென்னை உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. பொ.ஆ.1872 இல் முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு மேயோ (1869-1872) காலத்தில் நடந்தது. மேயோ, பொ.ஆ.1872இல் அந்தமானில் அவரது அலுவலகத்திலேயே கொல்லப்பட்டவர். நார்த்புரூக் (1872-76) காலத்தில் வேல்ஸ் இளவரசர் ஏழாம் எட்வர்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
இலக்கிய உலகில் ஓவன் மெரிடித் எனும் பெயரால் அறியப்படும் லிட்டன் பிரபு(1876-80) காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு வயது 21லிருந்து 19ஆக குறைக்கப்பட்டது. வாய்பூட்டுச் சட்டம் என்ற வெர்னாகுலர் பத்திரிக்கைச் சட்டம் பொ.ஆ. 1878இல் இயற்றப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல்
ஸ்தல சுய ஆட்சியின் தந்தை என போற்றப்படும் ரிப்பன் பிரபு(1880-84) காலத்தில் பொ.ஆ. 1881இல் முதல் தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது. அவ்வருடமே சரியான மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடைபெற்றது. பொ.ஆ.1882இல் கல்விக்காக ஹண்டர் கமிஷன் அமைக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் பொ.ஆ. 1883இல் நடந்தது. இல்பர்ட் மசோதா 1883-84 இல் நிறைவேற்றப்பட்டது. டப்ரின் பிரபு(1884-88) காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பொ.ஆ.1885இல் தோன்றியது.
தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி -https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/893689-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-20.html
அடுத்த பகுதி நவம்பர் 11 (வெள்ளிக்கிழமை) என்று வெளியிடப்படும்