திசைகாட்டி

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

செப்.30: டெல்லியில் நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாகத் தேர்வான ‘சூரரைப் போற்று’ படத்துக்கும் அப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டன. நடிகை ஆஷா பரேக்குக்கு 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

அக்.1: டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் அதிவேக 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

அக்.2: .ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஆரவல்லி மலைத்தொடரில் உலகின் மிகப்பெரிய ஜங்கிள் சஃபாரி பூங்காவை அமைப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.

அக்.3: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி அனில் குமார் சர்வதேச விண்வெளிக் கூட்டமைப்பின் (IAF) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அக்.6: இந்தியா ஆடவர் அணி ஹாக்கி வீரர் பி.ஆர்.ஜேஷ், மகளிர் அணி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் எஃப்.ஐ.ஹெச் ஆடவர், மகளிருக்கான சிறந்த கோல்கீப்பர்களாகத் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வாகினர்.

அக்.4, அக்.8: 2022ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாந்தே பேபோவுக்கு (ஸ்வீடன்) அறிவிக்கப்பட்டது. குவாண்டம் இயக்கவியலில் பணிபுரிந்த அலான் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் எஃப். கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் ஸாய்லிங்கர் (ஆஸ்திரியா) ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கிய கரோலின் ஆர். பெர்டோசி, பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா), மோர்டன் மேல்டால் (டென்மார்க்) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம், சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்புக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT