திசைகாட்டி

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

ஜூன் 17: ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு வட இந்தியாவில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்தப் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

ஜூன் 18: துருக்கி நாட்டை எல்லா மொழிகளிலும் ‘துருக்கியே’ என்று அழைக்க வேண்டும் என்ற அந்நாட்டின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அவை ஏற்றது.

ஜூன் 19: வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.

ஜூன் 20: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார். இந்த ஜோதி இந்தியாவின் 75 நகரங்கள் வழியாகப் பயணித்து மாமல்லபுரம் வந்தடைகிறது.

ஜூன் 21: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிசா பழங்குயினச் சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார். எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.

ஜூன் 22: ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியத் தூதர் திருமூர்த்திக்குப் பதிலாகப் புதிய தூதராக வெளியுறவுத் துறை அதிகாரி ருசிரா காம்போஜ் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 23: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை முடிவு செய்யும்விதமாக ஜூலை 11 அன்று புதிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவது என்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவானது.

ஜூன் 24: கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமை என்பதை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்புச் சட்ட உரிமை நீக்கப்பட்டது.

SCROLL FOR NEXT