கல்வி - வேலை வழிகாட்டி

சேதி தெரியுமா?

தொகுப்பு: மிது

டிச.25: தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடித்தது.

டிச.25: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

டிச.26: பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

டிச.28: உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப்’பை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

டிச.29: அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டது. அதேபோல, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்கிற சிறார் கதை தொகுப்புக்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டது.

டிச.30: தேசிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘அடல்’ தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தது.

டிச. 31: ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப் பாடுகளைத் தமிழக அரசு அமல்படுத்தியது.

டிச.31: துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா எட்டாவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது.

ஜன.1: புளோரோனா என்கிற புதிய கரோனா வைரஸ் வேற்றுருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டது.

SCROLL FOR NEXT