இந்திய விமானத் துறையில் கணினி இயக்குநர், அங்காடிக் கண்காணிப்பாளர், ஓட்டுநர், சமையல் கலைஞர் உள்ளிட்ட 26 ‘சிவில் சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,515 காலியிடங்கள் உள்ளன. பட்டம், பட்டயம், பிளஸ் 2,
எஸ்.எஸ்.எல்.சி. உள்ளிட்ட படிப்புகள் தகுதியாகக் கூறப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வயதுத் தகுதி 18 முதல் 25 வரை. விண்ணப்பிக்கக்
கடைசித் தேதி: 03.05.2021.
கூடுதல் தகவல்களுக்கு: indianairforce.nic.in
மத்திய அரசு பொறியியல் பணி
பொறியியல் பட்டம், பொறியியல் பட்டயம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் பொறியியல் துறையில் 215 காலியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2021. விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21. அதிகபட்ச வயது 30.
தேர்வுத் தேதி: 18.07.2021.
கூடுதல் விவரங்களுக்கு: https://bit.ly/2QdCovu