‘தமிழ் இந்து இயர்புக் 2021' எளிமையும் ஆழமும் மிக்க படைப்புத் தொகுப்பு. போட்டித் தேர்வுக்கான பல்வேறு குறிப்புகள், கட்டுரைகள் ஈர்க்கும் மொழியில் தரப்பட்டுள்ளன.
உலகின் எட்டுத் திக்கும் தமிழக மாணவர்களின் கல்வித் தேடல்கள் விரிவடைவதை கவனத்தில்கொண்டு கட்டுரைகள் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளன. அன்றாட நிகழ்வுகளைக் கவனப்படுத்துவதோடு எதிர்வரும் காலத்தின் சவால்களும் பேசப்பட்டிருப்பது வரவேற்புற்குரியது. வெறுமனே தகவல் தோரணமாக அமையாமல் சக மனிதர்கள், உயிர்கள் மீதான அன்பும், அக்கறையும் கொண்ட படைப்புகள் பற்பல.
ஆங்கிலம் ஒன்றும் எட்டாக்கனியல்ல எனும் நம்பிக்கையை தரும் வண்ணம் '3000 சொற்களில் ஆங்கிலம்' அமைந்திருக்கிறது. 'ஐ.ஏ.எஸ். மூலம் இந்தியாவைத் திருத்தி எழுதியவர்கள்' கட்டுரை, வாசிக்கிற இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் ஆக்கம். 60 ஆளுமைகள் குறித்த ஒரு பக்கக் கட்டுரைகள் தனித்தன்மையுடன் மிளிர்கின்றன. கரோனா குறித்த சுவையான, அறிவியல் வரலாற்று செய்திகள் பெரும் உழைப்புடன் தொகுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் குறித்த ஆழ்ந்த அக்கறையும் வெளிப்பட்டுள்ளது.
ஓராண்டின் செய்தித்தாளை வாசித்த மலைப்பும், அறிவுக்கடலில் மூழ்கி எழுந்த மகிழ்ச்சியும் கண்டிப்பாகக் கிட்டும் என உறுதியளிக்கிறேன். விறுவிறுப்பான மொழிநடை, சுவைமிக்க பல்துறைத் தகவல்கள், பரந்துபட்ட துறைசார் கட்டுரைகள் அணிவகுத்துள்ளன. இந்தியா-தமிழ்நாடு-உலகம் குறித்த ஆழமான தேடல்களுக்கான முனைப்பையும் ஒருங்கே தரும் இந்த அரிய இயர்புக், உடன்வைத்திருக்க வேண்டிய உற்ற தோழன்.
- பூ.கொ.சரவணன், இந்திய வருவாய் பணி, துணை ஆணையர்.
| ‘இந்து தமிழ் இயர்புக் 2021’ இல் பல பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 250. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற: ‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில் DD, Money Order, Cheque அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2021, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. தொடர்புக்கு: 7401296562 / 7401329402 |