திசைகாட்டி

சேதி தெரியுமா? - சாலை விபத்து 10% குறைவு

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

மார்ச் 16: நாட்டில் மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சாலை விபத்துகள் பத்து சத வீதம் குறைந்திருப்பதாக மத்திய போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்துகளை ஐம்பது சதவீதம் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு

மார்ச் 16: தி.மு.க. பொதுச் செய லாளராக 43 ஆண்டுகளாகப் பதவிவகித்த கே. அன்பழகன் மார்ச் 7 அன்று சென்னையில் காலமானார். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு மார்ச் 29 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடவுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதால், தன் பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு

மார்ச் 17: தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாட்டின் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்களை அடையாளம் காண்பதற்குத் தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர் தகுதிநீக்கம்

மார்ச் 18: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மணிப்பூர் மாநில அமைச்சர் டி. ஷியாம்குமார் சிங்கைத் தகுதிநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சட்டப்பேரவையில் அவர் நுழைவதற்கும் தடைவிதித்துள்ளது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஷியாம்குமார், பா.ஜ.க. வுக்குத் தாவி நகரத் திட்டமிடல், வனத்துறை அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டார். அவரது தகுதி நீக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் பட்டிருந்தது.

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பு

மார்ச்.19: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அவரது பதவி யேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலங்களவையி லிருந்து வெளிநடப்புச் செய்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகோய் பெயரை மாநிலங்களவைக்கு மார்ச் 16 அன்று முன்மொழிந்திருந்தார்.

2.5 கோடி வேலைவாய்ப்பு இழப்பு

மார்ச் 19: கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உலகில் 2.5 கோடி பேருடைய வேலைவாய்ப்பு இழக்கப்படும் என்று ஐ.நா. அறிவித் துள்ளது. ஒருங்கிணைக்கப் பட்ட சர்வதேசக் கொள்கையின் மூல மாக மட்டுமே உலக நாடுகள் இந்த வேலைவாய்ப்பின்மையைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO), உலக நாடுகள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மார்ச் 23: கோவிட்-19 தொற்று நோயால் உலகம் முழுவதும் 3,39,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றுநோயால் உலக நாடுகளில் 14,703 பேர் உயிரிழந்தி ருக்கின்றனர். இதுவரை, 99, 014 பேர் இந்த நோயிலிருந்து மீண்டி ருக்கின்றனர். இந்தியாவில் 425 பேர் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மார்ச் 31 வரை, மக்கள் அவசிய மில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT