கல்வி - வேலை வழிகாட்டி

குவான்டம் மேல் கவனம் குவியட்டும்!

செய்திப்பிரிவு

குவான்டம் கம்ப்யூட்டிங் துறையை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. எட்டாயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

குவான்டம் தொழில்நுட்பத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்க வேண்டுமென்றால் `வேகத்துடன் விவேகமானது’ எனலாம். இந்தத் தொழில்நுட்பத்தை தகவல் தொடர்பு, பாதுகாப்பு போன்ற பல துறைகளில் செயல்படுத்த முடியும். மேலும் கல்வி, மருத்துவம், செயற்கைகோளுக்கும் ஏவுதளத்துக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல் போன்ற விண்வெளி சார்ந்த துறைகளிலும் குவான்டம் தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

`குவான்டம் எனேபில்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ என்னும் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கி, குவான்டம் கணினிகளை உருவாக்கும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுவருகிறது. தொடர்ந்து குவான்டம் குறித்த விரிவான ஆராய்ச்சிகளுக்கும் உதவும் எண்ணத்துடன் மத்திய அரசு தற்போது நிதி ஒதுக்கியிருக்கிறது.

SCROLL FOR NEXT