அக்.20: துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து முதல் முறையாகக் கோப்பை வென்றது.
அக்.22: தேசிய மகளிர் ஆணையத் தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கர் டெல்லியில் பொறுப்பேற்றார்.
அக்.24: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஓய்வுபெற உள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
அக்.25: வங்கக் கடலில் உருவான டானா புயல் 120 கி.மீ. வேகக் காற்றுடன் ஒடிஷாவின் பிதர்கனிகா - தாம்ரா இடையே கரையைக் கடந்தது.
அக்.24: ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள தேசிய வளங்காப்பு இனப் பெருக்க மையத்தில் செயற்கைக் கருவூட்டல் மூலமாக முதல் கானமயில் குஞ்சு பொரிக்கப்பட்டது.
அக்.29: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 3.07 கோடி, பெண்கள் 3.19 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,964. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதியில் 1,73 லட்ச வாக்காளர்கள் உள்ளனர்.
அக்.29: இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 77 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
அக்.30: கிழக்கு லடாக் எல்லையில் தேப்சங், டெம்சோக் பகுதிகளிலிருந்து இந்திய – சீன ராணுவப் படைகள் வாபஸ் பெறும் பணிகளில் இரு நாட்டுப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன.
நவ.1: பொருளாதர நிபுணரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (இசிஏ) தலைவருமான பிபேக் டெப்ராய் (69) உடல் நலக் குறைவால் காலமானார்.