சொந்த வீடு

கான்கிரீட் கலவை சரியானதா?

செய்திப்பிரிவு

வீ

டு கட்ட கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டது, கட்டுமானத் துறையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு. எளிய மக்களும் உறுதியான வீட்டைக் கட்ட முடிந்தது. முன்பெல்லாம் நுட்பம் அறிந்த பணியாட்களால்தான் கான்கிரீட் கலவை செய்யப்படும். சிமெண்ட், ஜல்லி, மணல், நீர் போன்ற கலவையின் பகுதிப் பொருட்களைச் சரியான விகிதத்தில் கலப்பார்கள். இது பார்ப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். நாமும் அதன் தரத்தை அறிய முடியும். ஆனால், இப்போது அப்படியெல்லாம் இல்லை. ஆட்களுக்குத் திண்டாட்டம். அதுபோல வேலையையும் விரைவில் முடிக்க வேண்டியிருக்கிறது. பெருநகரங்களில் இடப் பற்றாக்குறையும் உண்டு. இதைத் தவிர்க்கும் பொருட்டுக் கலவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுப் பரவலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெரிய கட்டிடப் பணிகளுக்கு ரெடிமிக்ஸையும் பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறு இன்றைய தொழில்நுட்பத்தின்படி தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவையை நாம் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில், கான்கிரீட் கலவையில் சிமெண்ட், ஜல்லி, மணல், நீர் இவை எல்லாம் முறையான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும். இவற்றில் ஒன்று அளவு குறைந்தாலோ அதிகமானாலோ கான்கிரீட்டின் தரம் குறைந்துவிடும். அதுபோல ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை வெளியிடங்களில் தயாராகி எடுத்துக்கொண்டு வரப்படுகிறது. அதனால் அந்தக் கலவையின் தரத்தைக் கேட்டு உறுதிசெய்துகொள்வது அவசியம். கான்கிரீட்டின் தரம் குறைந்தால் கட்டிடத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

SCROLL FOR NEXT