சொந்த வீடு

கொசு விரட்டும் செடிகள்

செய்திப்பிரிவு

மழைக் காலம் புதிய புதிய பச்சைத் தாவரங்கள் வளரத் தொடங்கும் காலம். ஆனால் அதே போல் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவது இதே காலகட்டத்தில்தான். கொசுக்களைக் கட்டுப்படுத்த செயற்கையான கொசுபத்திகள், மாத்திரைகள், திரவம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதில் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டலாம்.

நொச்சி, வேம்பு, பச்சிலை போன்ற செடிகளில் இந்தப் பண்புகள் மிகுந்துள்ளன. சாமந்தி, நொச்சி, வேம்பு போன்ற தாவரங்களுக்கு இந்தக் குணம் உண்டு. இவை அல்லாது ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிகளிலும் இந்தக் குணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக பயப்படாமல் இந்தச் செடிகளை வளர்ப்பதால் நமக்கு இருவிதமான பயன்கள் கிடைக்கும். வீட்டிற்கு அழகும் கிடைக்கும்.

SCROLL FOR NEXT