சொந்த வீடு

இணைய வீட்டுக் கண்காட்சி

செய்திப்பிரிவு

வீடு என்னும் நம் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றுவதில் நமக்குப் பல சந்தேகங்கள், குழப்பங்கள் வரும். நம்பகமான கட்டுநரைத் தேட வேண்டும். கட்டுமானம் தரமாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வேறு எதுவும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் விசாரித்து அறிய வேண்டும். இவை எல்லாவற்றையும் இருந்த இடத்தில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும் என நாம் நினைக்கலாம்.

அதற்கான ஒரு வாய்ப்பை பாரம்பரியம் மிக்க தி இந்து குழுமம் ஏற்படுத்தித் தருகிறது. தி இந்து, இணைய வீட்டு வீட்டு விற்பனைக் கண்காட்சியை 2016 (The Hindu Virtual Property Fair 2016) இணைய வீட்டு விற்பனை நிறுவனமான ரூஃப் அண்ட் ஃப்ளோருடன் (Roof and Floor) இணைந்து வழங்குகிறது. இது தென்னிந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான இணைய வீட்டு வீட்டு விற்பனைக் கண்காட்சி. இணையம் வழியாக வீட்டை வாங்குபவர்களும் விற்பவரும் உரையாடுவதற்கான வாய்ப்பையும் இந்தக் கண்காட்சி ஏற்படுத்தித் தருகிறது.

இந்த இணைக் கண்காட்சிக்கு இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வீடு வாங்கும் ஆர்வத்துடன் வருகை தந்திருக்கிறார்கள். இவர்கள் 24 வயதிலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள். ஹிராநந்தனி கம்யூனிட்டீஸ், சட்வா, பிபிசிஎல், இண்டியா புல்ஸ், ப்ரஸ்டிஜ், நோவா, இமாமி ரியால்டி, அட்ராய்ட், வாத்வா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் குடியிருப்புத் திட்டங்களில் வீடு வாங்கப் பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்காட்சிக்கான வீட்டுக் கடன் உதவியை எல்.ஐ.சி. ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்தக் கண்காட்சியின் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் வசதிக்கேற்ற வீட்டைக் கண்டடையலாம். கட்டுமான நிறுவனத்தைக் குறித்த விபரம், விலை, வீட்டுக்கு அருகில் உள்ள வசதிகள், கட்டுமான முறைகள் குறித்தான விபரம், குடியிருப்பின் திட்டம் ஆகியவற்றையும் இந்த இணையக் கண்காட்சி மூலம் காணலாம். வீடு வாங்குவது குறித்த சின்னச் சின்ன குறிப்புகளையும் இந்த இணையக் கண்காட்சியில் படித்துத் தெளிவுபெறலாம். இணையக் கண்காட்சிக்கான சுட்டி: >http://propertyfair.thehindu.com

SCROLL FOR NEXT