சொந்த வீடு

பனி விழும் கட்டிட வனம்

செய்திப்பிரிவு

உலகின் உயரமான கட்டிடங்களின் ஒளிப்பட அணிவகுப்பை ஏற்கனவே இந்தப் பகுதியில் பார்த்திருக்கிறோம். அதில் ஐக்கிய அரபு நாட்டின் கட்டிடமும் சவுதி அரேபிய நாட்டின் கட்டிடமும்தான் இப்போது போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன. இவை ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது உலகின் உயரமான மலைகளில் உள்ள எழிலான கட்டிடங்களைப் பற்றிப் பார்ப்போம். இன்னும் இரு மாதங்களில் நம் நாட்டின் பல பகுதிகளில் பனி பொழியப் போகிறது. இந்தியாவில் காஷ்மீர், சிம்லா, மனாலி போன்ற பகுதிகளில் இனிதான் பனி பொழியத் தொடங்கும். நம்முடைய ஊட்டி, கொடைக்கானலிலும் பனி பொழியும். இந்தக் காலகட்டத்தில் பனி பொழியும் மலை மீது கட்டப்பட்ட அழகான கட்டிடங்களின் அணிவகுப்பைக் காணலாம். இந்தத் தொகுப்பில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தங்கும் விடுதிகள்தாம்.

SCROLL FOR NEXT