சொந்த வீடு

நமக்குத் தேவையான பசுமைப் பாடங்கள்

செய்திப்பிரிவு

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த ‘தி பில்ட் எகோ எக்ஸ்போ’வில் (Build Eco Xpo) பசுமை கட்டிடங்களை அமைப்பதற்கான பல புதுமையான வழிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த வழிகளை இந்தியாவிலும் பயன்படுத்தமுடியும்.

சிங்கப்பூர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்த எட்டு புதுமையான பசுமை பொருட்களையும் இந்தியாவில் பயன்படுத்த முடியும்.

பசுமைச் சுவர்கள்

செங்குத்துத் தோட்டங்கள், வாழும் சுவர்கள் என்று அழைக்கப்படும் இந்தப் பசுமை சுவர்கள் சிங்கப்பூரில் மிகவும் பிரபலம். இந்தப் பசுமை சுவர் அமைப்பானது நகரங்களில் கட்டப்படும் வீடுகளின் கூரைகள், முகப்புகள், சுவர்கள், கட்டமைப்புகள், உட்புறம் போன்ற இடங்களில் நுண்பருவநிலை (microclimate) குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பரிசோதிக்க 500 தாவர இனங்களில் அமைக்கப்படும் இந்தப் பசுமை சுவர்கள் உலகின் முக்கிய நீர்-திறன் வாய்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.

பசுமைச் சுவர்களை எந்த வடிவத்திலும் அளவிலும் அமைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால் வீடுகளில் இதைப் பலவிதங்களில் அமைக்க முடியும். அத்துடன், பெரும்பாலான சுவர்கள் ஒருங்கிணைந்த தண்ணீர் விநியோக அமைப்பையும் கொண்டுள்ளது. இந்தச் சுவர்கள் வீட்டை இளவெப்பத்துடன் வைத்துக்கொள்ளும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘கிரீனாலஜி’(Greenology) என்னும் நிறுவனம் இந்தப் பசுமை சுவர் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் 16,000 மீ. சதுர. சுவர்களை அமைத்திருக்கிறது. ‘கிரீனாலஜி க்ளோ லைட்ஸ்’ (Greenology Glow Lights) தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும்படியும், குறைவான வெளிச்சம் அல்லது வெளிச்சமில்லாத சூழலிலும் வளரும்படி வடிவமைக்கப்படுகிறது.

நன்மைகள்:

வெப்பத்தைக் குறைக்கிறது, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, சொத்தின் மதிப்பை உயர்த்துகிறது, உடல்நலனையும் மேம்படுத்துகிறது.

மூங்கில் தரைத்தளம்

பூமியில் வேகமாக வளரும் மரச் செடியாக மூங்கில் விளங்குகிறது. பாரம்பரியமான கடினமான மரத்துக்கு மாற்றாக மூங்கில் பயன்படுத்துவது சிறந்தது. மூங்கில், வலிமையான கட்டுமான பொருட்களில் முக்கியமானது. திடமான மூங்கில் தரைத்தளம் அமைப்பது நீடித்துழைக்கக்கூடியதாகவும், சூழலுக்கு உகந்த மாற்றாகவும் செயல்படுகிறது. இந்த மூங்கில் தரைத்தளம் இப்போது பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. அறுவடைச்செய்யப்படும் மூங்கில் தண்டுகளைக் கீற்றுகளாக வெட்டி லேமினேட் செய்யப்பட்ட தரைத்தள பலகைகளாக மாற்றப்படுகின்றன. இந்த மூங்கில் தரைத்தளம் பல வகைகளிலும் கிடைக்கின்றன.

நன்மைகள்:

சூழலுக்கு உகந்தது, நீடித்துழைக்கக்கூடியது, நீர்புகா தன்மையுடையது, பராமரிப்பது எளிதானது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் செங்கற்கள்

‘ஆக்டாபேவர்ஸ்’ (OCTApavers) என்பது செங்கற்களையும் டைல்ஸையும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுவது ஆகும். தைவானைச் சேர்ந்த ‘ஷோ ஃப்பூ பிளாஸ்டிக்ஸ்’ (Show Fuu Plastics) தயாரிப்பான இந்த டைல்ஸ் சூழலுக்கு உகந்தது. இந்த டைல்ஸுக்கு அடியில் தானியங்கி பாசன அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால் இதைப் புற்களை வளர்க்கக்கூட பயன்படுத்தலாம். புற்கள் வளரவும், மழைத்தண்ணீர் மண்ணுக்கடியில் கசியவும் இந்த டைல்ஸில் வழிச்செய்யப்பட்டுள்ளது.

இது கட்டுமான நிலைத்தன்மையுடனும், 70 சதவீத குறைவான எடையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், எண்பது சதவீத குறைவான ஆற்றலைப் பயன்படுத்தவும், குறைவான கரியமில வாயுவை வெளியிடும்படியும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகமான வெப்பநிலை சூழலைத் தாங்கும்படியும் இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனநிறுத்துமிடங்கள், வணிகவளாகங்கள் போன்ற இடங்களுக்கு இந்த டைல்ஸ் பொருத்தமானதாக இருக்கும்.

நன்மைகள்:

மறுசுழற்சியை ஊக்கப்படுத்துகிறது, குறைவான எடையைக் கொண்டது

க்ரோபுரோ (Growpro)

இது திறமையான பூந்தொட்டி. இந்தப் பூந்தொட்டி எப்போது செடிக்குத் தண்ணீர் ஊற்றவேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதைப் பயனாளிகளுக்கு எடுத்துரைக்கிறது. ‘ஸ்கூல் ஆஃப் டிசைன் அண்ட் என்விரான்மென்ட், என்ஜீ பாலிடெக்னிக்’ (School of Design and Environment, Ngee Ann Polytechnic) என்ற கல்லூரி மாணவர்கள் ‘க்ரோபுரோ’வை உருவாக்கியிருக்கின்றனர். செடிகளுக்கு அதிமாகத் தண்ணீர் ஊற்றுவதைத் தடுக்கவும், பூந்தொட்டிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

‘க்ரோபுரோ’வில் இருக்கும் மண் காய்ந்துபோய்விட்டால், தண்ணீர் தேவைப்படுகிறது என்பதைத் தெரிவிக்க தொட்டி தானாகத் திரும்பும். பொதுமான அளவுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டால் தொட்டி இயல்பான நிலைக்கு வந்துவிடும். தொட்டியின் எடையை வைத்து இந்தச் செயல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு மின்சாரம் தேவைப்படாது.

நன்மைகள்: தண்ணீரைச் சேமிக்கலாம், செடிகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.

© தி இந்து(ஆங்கிலம்)

SCROLL FOR NEXT