சொந்த வீடு

தீபத் திருவிழாக்களின் கட்டிடங்கள்

செய்திப்பிரிவு

தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம்.

இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்கப்படுவது அங்கு வழக்கத்தில் உள்ளது. அதுபோல ஜெர்மனியின் பெர்லின் ஒளித் திருவிழாவும் இதைப் போன்று பிரசித்துபெற்றது. இம்மாதிரியான உலகத்தின் பிரசித்திபெற்ற தீபத் திருவிழாக்களின் ஒளிப்படத் தொகுப்பு இது:

SCROLL FOR NEXT