சொந்த வீடு

படமெடுக்கும் கட்டிடம்

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரில் கட்டப்படவுள்ள இந்தக் கட்டிடம். இரு ராஜ நாகங்கள் இரு வேறு திசைகளில் படம் எடுத்து நிற்பதுபோன்ற வடிவத்தில் இந்தக் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டிடத்தை சீனாவைச் சேர்ந்த ஈஸ்ட் சைனா ஆர்கிடெக்சுரல் டிசைன் அண்ட் ரிசார்ஜ் என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

குஜராத் இண்டெர்னேஷமல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் குஜராத் மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு ஒரு கள இருக்கும். இந்தக் கட்டிடத்தை கிஃப்ட் என சுருக்கமாக அழைக்கிறார்கள். 54 மாடிக் கட்டிடமாக உருவாக்கப்படவுள்ள இந்தக் கட்டிடம் உலகின் அதிநவீனக் கட்டிடங்களுள் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் நாகம் ஒரு வழிபாட்டுக் கடவுளாக ஆராதிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டிடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒரு கோடி பேர் இந்தக் கட்டிடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கட்டிடம் வரும் 2020-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT