உலகின் சிறந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது இந்தக் கட்டிடம். The iceberg (பனிப்பாறை) என்னும் பெயர் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் டென்மார்க்கின் ஆருஸ் நகரத்தில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் பார்ப்பதற்கு கடல் நடுவில் உள்ள பனிப்பாறை போலவே காட்சி அளிக்கிறது. 2013-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டிடப் பணி 2014-ம் ஆண்டு நிறைவுற்றது. 208 வீடுகள் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளன.