சொந்த வீடு

வெள்ளப் பாதிப்பு: இ.எம்.ஐ.யில் சலுகை கிடைக்குமா?

டி. கார்த்திக்

சென்னையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழையும், சீறிப் பாய்ந்த பெரு வெள்ளமும் பல இடங்களில் வீடுகளைச் சின்னாபின்ன மாக்கிவிட்டன. குருவி சேர்ப்பது போலச் சேர்த்து ஆசையாக வாங்கிய வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டும், உடைமைகள் பழுதாகியும் காட்சியளிக்கின்றன. ஆசை ஆசையாகப் புறநகரில் வீடு வாங்கியவர்கள் இன்று செய்தவறியாமல் தவித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட வீட்டைச் சீரமைப்பதா, பழுதான உடைமைகளைச் சரி செய்வதா என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள். எதைச் சரி செய்தாலும் கையில் உடனே பணம் தேவை. ஏற்கனவே இ.எம்.ஐ. செலுத்தி வருபவர்களுக்கு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள செலவு பெரும் சுமையை உண்டாக்கும் என்பது நிச்சயம். இந்தச் சிக்கலான நேரத்தில் வாங்கிய வீட்டுக் கடனுக்காக வங்கிகள் வசூலிக்கும் இ.எம்.ஐ.-யை வசூலிக்காமல் சலுகை காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை புறநகர்ப் பகுதிகளை நம்பியே நடைபெற்று வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்கியவர்களுக்கு வெள்ளம் பலவிதப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பது போலச் செலவுகளையும் எகிற விட்டுச் சென்றுள்ளது. ஒரு புறம் வாகனங்கள் சேதம், உடைமைகள் நாசம், வீடு பாதிப்பு எனப் பல செலவுகளை ஒரு சேர தலையில் அள்ளி வைத்துவிட்டது. இன்று புதிய வீடுகளுக்கும், வீட்டுக் கடனுக்கும் காப்பீடு எடுக்கப்பட்டுவிடுகின்றன. எனவே முறையாகக் காப்பீடு நிறுவனங்களை அணுகி இழப்பீடு பெற முடியும். ஆனாலும், காப்பீடு எடுத்திருந்தாலும் ஒரு சேர எல்லாப் பாதிப்புக்கும் இழப்பீடு கிடைக்குமா, பாதிப்புக்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது என நிறைய பணிகளும் இதில் உள்ளன.

சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை புறநகர்ப் பகுதிகளை நம்பியே நடைபெற்று வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்கியவர்களுக்கு வெள்ளம் பலவிதப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பது போலச் செலவுகளையும் எகிற விட்டுச் சென்றுள்ளது. ஒரு புறம் வாகனங்கள் சேதம், உடைமைகள் நாசம், வீடு பாதிப்பு எனப் பல செலவுகளை ஒரு சேர தலையில் அள்ளி வைத்துவிட்டது.

இன்று புதிய வீடுகளுக்கும், வீட்டுக் கடனுக்கும் காப்பீடு எடுக்கப்பட்டுவிடுகின்றன. எனவே முறையாகக் காப்பீடு நிறுவனங்களை அணுகி இழப்பீடு பெற முடியும். ஆனாலும், காப்பீடு எடுத்திருந்தாலும் ஒரு சேர எல்லாப் பாதிப்புக்கும் இழப்பீடு கிடைக்குமா, பாதிப்புக்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது என நிறைய பணிகளும் இதில் உள்ளன.

இந்தச் சூழ்நிலையில் பல வங்கிகள் வெள்ள நிவாரணத் தொகையை அரசிடம் கொடுத்து உதவுவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிவாரண உதவியோடு வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.-யைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் கிடையாது என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படிச் சில சலுகைகளை வங்கிகள் அறிவித்திருந்தாலும், இ.எம்.ஐ. செலுத்துவதில் சலுகை காட்டுவது பற்றி வங்கிகள் இதுவரை அறிவிக்கவில்லை.

அண்மையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், “பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகள், வாகனங்களுக்கு வங்கிக் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் செலுத்தி வரும் மாதத் தவணை தொகையில் சலுகை காட்ட அறிவுறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கையைப் பல வாடிக்கையாளர்களும் கூறவே செய்கிறார். கடந்த ஆண்டு மடிப்பாக்கத்தில் வீடு வாங்கி குடியேறிய பிரியா என்பவர் இந்தக் கோரிக்கை பற்றிப் பேசினார். “மடிப்பாக்கத்தில் கடந்த ஆண்டு வீடு வாங்கிக்கு குடியேறினேன். இப்போது வந்த வெள்ளத்தில் எனது வீடு பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. உடைமைகள் நாசமாகிவிட்டன. வீட்டுக் கடனுக்கு மட்டுமே நான் காப்பீடு எடுத்திருக்கிறேன். வீட்டு உடைமகளுக்கு எடுக்கவில்லை. இந்தக் கடினமான சூழ்நிலையிலும், இந்த மாதத்திற்குரிய தவணைத் தொகையை வங்கி பிடித்துவிட்டது. இந்த மாதம் தவணைத் தொகையைப் பிடித்தம் செய்யாமல் சலுகை காட்டியிருந்தால் அந்தத் தொகையைக் கொண்டு உடைமைகளை பழுது நீக்கியிருப்பேன். அடுத்த மாதமாவது வங்கிகள் இந்தச் சலுகையைக் காட்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதுபோன்ற சமயங்களில் வங்கிகள் திறந்த மனதுடன் நடந்துகொள்ளும் என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன். “வழக்கமாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, தவணை செலுத்துவதில் சலுகை போன்ற நடவடிக்கைகள் போன்ற உதாரணங்கள் உள்ளன. ஆனால், வீட்டுக் கடனுக்கு அப்படி ஒரு முன் உதாரணம் இல்லை. தவணைத் தொகையைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் கிடையாது என்ற அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டுவிட்டன. இரண்டு மாதங்களுக்குத் தவணைத் தொகையைத் தாமதகாமகச் செலுத்தலாம் என்றும் வங்கிகள் கூறிவிட்டன.

ஆனால், இதுபோன்ற சமயங்களில் வங்கிகள் திறந்த மனதுடன் நடந்துகொள்ளும் என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன். “வழக்கமாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, தவணை செலுத்துவதில் சலுகை போன்ற நடவடிக்கைகள் போன்ற உதாரணங்கள் உள்ளன. ஆனால், வீட்டுக் கடனுக்கு அப்படி ஒரு முன் உதாரணம் இல்லை. தவணைத் தொகையைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் கிடையாது என்ற அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டுவிட்டன. இரண்டு மாதங்களுக்குத் தவணைத் தொகையைத் தாமதகாமகச் செலுத்தலாம் என்றும் வங்கிகள் கூறிவிட்டன.

வீட்டுக் கடன் தொகையிலோ அல்லது வட்டியிலோ சலுகை காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்குக் கோரிக்கை மட்டுமே விடுக்க முடியும். இதுபற்றி வங்கிகள்தான் முடிவு செய்ய வேண்டும். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை இதுபற்றி வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செலுத்தும் தவணைத் தொகையில் விரைவில் சலுகைகளை எதிர்பார்க்கலாம்” என்கிறார்.

வங்கிகள் மனது வைத்தால் தவணைத் தொகையில் சலுகையும் சாத்தியம்தான்!

SCROLL FOR NEXT