சொந்த வீடு

பயன் தருமா ஆர்.எம்.சி. கான்கிரீட்?

செய்திப்பிரிவு

ஆர்.எம்.சி. என்பது தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள கான்கிரீட். அதாவது Ready-mix concrete என்பதன் சுருக்கம்தான் RMC. இது உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் உள்ள கான்கிரீட். அதாவது ஜல்லி, மணல், சிமெண்ட், நீர், வேதிப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆர். எம். சி தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டிடப் பணி நடக்கும் இடத்துக்குச் செல்லும் வரை உலர்ந்துவிடாமல் இருக்க கான்கிரீட்டுடன் சில வேதிப் பொருள்களைக் கலக்குகிறார்கள்.

பொதுவாக வேலை நடக்கும் இடத்தில் உருவாக்கப்படும் கான்கிரீட் கலவை இறுக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வேலைகள் முடிய அதிக நேரம் ஆகும். ஆனால் ஆர்.எம்.சி. விரைவில் இறுகிவிடக்கூடிய தன்மையில் கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் ஆர்.எம்.சி.யின் விலை சாதாரண கான்கிரீட்டை விட அதிகம்தான். பெரிய அளவிலான கட்டிடப் பணிகளுக்கு இது உகந்தது. ஏனெனில் குறித்த காலத்துக்கு முன்பே பணிகள் முடிந்துவிடுவதால். நேரம் மிச்சப்படும். அதன் மூலம் கட்டுமானத்துக்கான பணமும் மிச்சமாகும்.

மேலும் ஆர்.எம்.சி.யின் தரம் பணி இடத்தில் தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவையைவிட அதிகம். ஏனெனில் கான்கிரீட்டைத் தயாரிக்கும்போது வெளியில் உள்ள தூசிகள் அந்தக் கலவையுடன் கலக்கும் சாத்தியம் உண்டு. மேலும் கான்கிரீட் கலவை தயாரிக்கத் தனி இடம் தேவை. பணியாட்களும் தேவைப்படுவார்கள். மேலும் ஆர்.எம்.சி.முழுவதும் மூடப்பட்ட நிலையில் நேரடியாகக் கட்டிடத்தின் மீது செலுத்தப்படுவதால் அதில் தூசி கலப்பது குறையும்.

இவ்வளவு நன்மைகள் உள்ள ஆர்.எம்.சியைப் பயன்படுத்துவதில் நமக்குத் தயக்கம் ஏற்படுத்தும் முதல் அம்சம் இதன் விலை. அதிக விலைக்கு மட்டுமே ஆர்.எம்.சி. கிடைப்பதால் செலவு வழக்கத்தைவிட அதிகமாகும். மேலும் ஆர்.எம்.சியைக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவும் இதில் கூடிவிடும். கட்டுமான இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கும்போது அது பலருக்கும் வேலை வாய்ப்பாக அமையும். ஆனால் ஆர். எம். சி. இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைக் குறைத்துவிடும். ஆனால், எந்தப் புதிய தொழில்நுட்பத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கும் இல்லையா?

SCROLL FOR NEXT