சொந்த வீடு

சென்னையில் வீட்டுக் கண்காட்சி

செய்திப்பிரிவு

இந்திய கட்டுநர் சங்கமும் தென்னிந்திய கட்டுநர் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் வீட்டுக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்று (16.10.15) தொடங்கிய கண்காட்சி, நாளை ஞாயிற்றுக் கிழமை (18.10.15) அன்று முடிவடையவுள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்தியக் கட்டுநர் சங்கம் இந்தியாவில் 120 கிளைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் வீட்டுக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 2015-ம் ஆண்டுக்கான வீட்டுக் கண்காட்சி ‘ஹவுஸ் ஹண்ட் எக்ஸ்போ 2015’ என்ற பெயரில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இன்றும் நாளையும் கண்காட்சி தொடர்ந்து நடக்கிறது.

இந்தக் கண்காட்சியில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. குறைந்த விலை வீடுகளில் தொடங்கி அதிக விலை கொண்ட ஏராளமான வீட்டுத் திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களாக எல் & டி, ஷோபா டெவலப்பர்ஸ், பிபிசிஎல், அர்பன் ட்ரீ, பாஷ்யம், ஸ்ரீராம் ப்ராப்ரட்டீஸ், ரூபி, லேண்ட்மார்க் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வீட்டுத் திட்டங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளன. வீட்டுக் கடன் தொடர்பான விவரங்களைக் கேட்டறிய வங்கிகளும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

இந்திய கட்டுநர் சங்கம், கிரெடாய் அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகும்.

SCROLL FOR NEXT