கண்ணாடிகளைப் பயன்படுத்தி வீடு கட்டுவோம். ஆனால் முழுக்க முழுக்கக் கண்ணாடியால் வீடு கட்டுவது சாத்தியமா?
அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக் கலைஞர்களின் ஒருவரான பிலிப் ஜான்ஸன் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். 1949-ம் ஆண்டு அவர் தனது சொந்த உபயோகத்துக்காகக் கட்டியுள்ளார். இரும்பையும் கண்ணாடியையும் கொண்டு இந்த வீட்டை அவர் உருவாக்கியுள்ளார்.
56 அடி நீளமும் 32 அடி அகலமும் 10.5 அடி உயரமும் கொண்டது இந்த வீடு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ கனான் பகுதியில் இந்த வீடு உள்ளது.
மரங்களுக்கு இடையில் புல்வெளிகளுக்கு மேலே இந்த வீடு ஒரு இயற்கையின் தொட்டிலைப் போல உள்ளது.