சீதாராமன்
அறைக்கலன்களின் பயன்பாடு இன்றைக்குப் பரவலாகி இருக்கிறது. பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்து வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க சோபா இருக்கிறது. சில வீடுகளில் உணவு மேஜையையும் பார்க்க முடிகிறது.
இது மட்டுமல்ல அலங்கார அறைக்கலன், படிப்பறை அறைக்கலன் என இன்னும் பல பயன்பாடுகளுக்கு அறைக்கலன்கள் வந்துவிட்டன. இதற்கெல்லாம் தொடர்ச்சி எனச் சில அறைக்கலன்களைச் சொல்லலாம். அவற்றுள் ஒன்றுதான் சாய்மானம் அற்ற இருக்கை (stool).
இன்றைக்கு மது விடுதிகள், மருத்துவமனைகள் போன்ற சில இடங்களில் மட்டும் இதன் புழக்கத்தைப் பார்க்க முடியும். அதுவும் பாரம்பரியமான வடிவம் அல்லாது, சுழலக்கூடிய வகையில் இதன் அமைப்பு இருக்கும். இந்த ஸ்டூல் தொடக்கத்தில் கிரேக்கத்தில் வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பிறகு இதில் பல நாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் வந்தன.
கால்பகுதி விலங்குகளின் கால்களைப் போல் சற்றே வளைந்து ஃபிரெஞ்சு ஸ்டூல் உருவானது. மூன்று கால்களுடன் உட்காரும் பகுதி மெத்தையில் வடிவமைக்கப்பட்டு ஜெர்மன் ஸ்டூல் உருவானது. இப்படிப் பல வடிவங்கள் உள்ளன. இன்றைக்கும் இந்த வடிவங்களில் ஸ்டூல் கிடைக்கின்றன. அதன் சில வடிவங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது: