குளியலறை என்பது நம் உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் இடம். மனச் சோர்வு நீங்கிப் புத்துணர்வு பெறும் இடம். ஆனால் அதிகமான அழுக்கும் கிருமியும் தோன்றும் சேரும் இடமும் அதுதான்.
அதனால் தினமும் குளியலறையைச் சுத்தப்படுத்துவது மிகவும் நல்லது. நம்மைச் சுத்தப்படுத்துவதுபோல அறையையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் குளிக்கும்போது தண்ணீர் தெறித்துப் பக்கச் சுவர்களில் கிருமிகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.
அழுக்கும் ஒரு படிவமாகப் படிந்துவிடும். இப்படியாக குளியலறைச் சின்னச் சின்ன கிருமிகளும் குடியிருப்பாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. இம்மாதிரி தண்ணீர் விழும் இடங்களைக் கிருமிகள் வசிப்பிடமாகக் கொள்கின்றன.
அதனால் குழாய்களைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும் சிறிது நீர் வெளியேறும் வரை குழாயைத் திறந்து வைத்து. அதன் பிறகு உபயோகிக்க வேண்டும்.