சொந்த வீடு

தாம்பரம் அருகில் நியூ விஷன் டவுன்ஷிப்

செய்திப்பிரிவு

சென்னையின் ரியல் எஸ்டேட் விற்பனை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தென் சென்னைப் பகுதிகளில் வீடு விற்பனை அதிக அளவில் நடந்துவருவதாகவும் அந்த அறிக்கை கூறியது. மத்திய சென்னை, வட சென்னை பகுதிகளை ஒப்பிடும்போது தென் சென்னை கடந்த பல ஆண்டுகளாகவே வீடு விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. அதற்குக் காரணம் இங்கு நிலவும் தென் சென்னையில் கிடைக்கும் அமைதிதான்.

ஆனால், தென் சென்னைப் பகுதியும் இப்போது பரபரப்பாகிவிட்டது. தென் சென்னைப் பகுதிகளில் ஒன்று வண்டலூர். அதற்கு அருகில் புதிய பேருந்து நிலையம் இப்போது அமையவுள்ளது. அதுமட்டுமல்லாமல் தரமான கல்வி நிறுவனங்களும் அருகிலேயே இருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் இந்தப் பகுதியில் வீடு வாங்கப் பலரும் விரும்புகிறார்கள்.

இந்தப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டவுன்ஷிப் திட்டம் தான் ‘நியூ விஷன் டவுன்ஷிப்’ வீட்டு மனைத் திட்டம். சென்னையின் முக்கியமான சாலையான ஜி.எஸ்.டி. சாலைக்கு அருகிலேயே இந்தத் திட்டம் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

வண்டலூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலை வழியாகவும் இந்தத் திட்டத்தை அணுக முடியும். தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திட்டம் அமைந்துள்ளதால் நகரத்துக்குள் எளிதாகச் சென்று வர முடியும். அதுமட்டுமல்ல; சென்னை விமான நிலையம் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வண்டலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்தப் புதிய டவுன்ஷிப் திட்டத்துக்கு அருகில் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரி, தாகூர் பொறியியல் கல்லூரி, ஜி.கே.எம். பொறியியல் கல்லூரி, தாகூர் மருத்துவக் கல்லூரி, வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிரசண்ட் பொறியியல் கல்லூரி, சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் அருகில் உள்ளன. மேலும் தாகூர் மருத்துவமனை, கோஷ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, இந்து மிஷன் மருத்துவமனை, செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் அருகிலேயே அமைந்துள்ளன. எஃப்.ஐ.ஐ.டி.ஜே.இ.இ. வேர்ல்டு பள்ளி இந்தத் திட்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

பட்டா மாறுதல், வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றை எந்தவிதக் கட்டணமும் இன்றி அவர்களே செய்து தருகிறார்கள். மேலும், 80 சதவீத வங்கிக் கடனுக்கு உதவுகிறார்கள். இந்தத் திட்டத்தில் அழகாக உருவாக்கப்பட்ட பூங்கா அமைந்துள்ளது. 30 அடியில் நிலத்தடி நீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மின் இணைப்பும் தெருவிளக்குகளும் இந்தத் திட்டத்தில் உள்ளன.

இந்தத் திட்டம் குறித்து மேலதிகத் தொடர்புக்கு: 98519 98519, 044 4018 4018

SCROLL FOR NEXT