ரூபி பில்டர்ஸ்
சென்னை போன்ற பெருநகரில் தங்களுக்குத் தேவையான வீடுகளை எல்லோரும் தனித்தனியே கட்டிக்கொள்ள முடிவதில்லை. ஆகவே பல அடுக்குமாடிக் குடியிருப்பு களைக் கொண்ட திட்டங்களை வெவ்வேறு நிறுவனங்கள் நிறைவேற்றி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் நுகர்வோரை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தாம்பரம் அருகே உள்ள ரூபி பில்டர்ஸ் அதிக அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கிவருகிறது.
தற்போது ரூபி பில்டர்ஸ் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் புது வகையிலான அறிவிப்பைச் செய்துள்ளது. அதாவது அதன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும் நுகர்வோரின் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்விக்கு வகைசெய்யப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தையும் தங்கள் நிறுவனமே கட்டிவிடுவதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளார்கள்.
வண்டலூருக்கு அருகே அமையவிருக்கும் 15 மாடிகள் கொண்ட தங்கள் புது அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட 208 வீடுகளையும், மூன்று படுக்கையறை கொண்ட 90 வீடுகளையும் உருவாக்கிவருகிறார்கள். வீட்டில் வசிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்பாக இது இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் ரூபி ஆர். மனோகரன் தெரிவிக்கிறார்.