நாட்டின் வளர்ச்சியில் முக்கியமானது கட்டுமானத் துறை. ஆனால் அந்தத் துறைக்கு என்று ஒரு சின்னம் இல்லை. அதாவது டாக்டர்களுக்கு ஒரு சின்னம் இருக்கிறது. வழக்கறிஞர்களுக்கும் சின்னம் இருக்கிறது. ஆனால் கட்டிட வடிவமைப்பாளரைக் குறிக்க ஒரு தனிச் சின்னம் அவசியம் என இந்தியக் கட்டுமான வடிவமைப்பு கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது.
மிகப் பெரிய கட்டிடங்களை வடிவமைக்கும் இந்த வடிவமைப்பாளர்கள் தங்களுக்கான குறியீட்டைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ள நினைக்க வில்லை. அதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இந்தியக் கட்டுமான வடிவமைப்பு கவுன்சில் இதற்காக இந்தியக் குடிமகன்கள் அனைவருக்குமான ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
இந்தப் போட்டி தனி நபருக்கானது. நிறுவனங்களோ, கல்வி நிலையங்களோ, அமைப்புகளோ பங்கேற்க முடியாது. கட்டணம் இந்தியர்களுக்கு ரூ.1,000. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 50 அமெரிக்க டாலர். மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை உண்டு.
இந்திய மாணவர்களுக்கு ரூ. 500. வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு 50 அமெரிக்க டாலர். இதில் வெற்றிபெறுபவருக்கு ரூ.1 லட்சமும் கோப்பையும் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அவர் இந்த முத்திரையைக் கண்டுபிடித்தவர் என்ற கவுரவம் அவருக்கு வாழ்நாள் பெருமையைச் சேர்க்கும். இந்திய ரூபாய்க்கான ₹ சின்னம் இம்மாதிரியான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு: >http://www.zingyhomes.com/media/pdf/competition-rules.pdf
விண்ணப்பிக்க: >http://www.zingyhomes.com/coa-architect-logo-competition/