பழமையைப் பொக்கிஷ மாகப் பேணிக் காக்கும் இடத்துக்குப் பெயர்தானே அருங்காட்சியகம். ஆனால் புதுமையைப் பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு அருங்காட்சியகத்தை வடிவமைக்க வேண்டும் என அறிவித்தது லைகெட் புடாபெஸ்ட் புராஜெக்ட் நிறுவனம். ஹங்கேரி நாட்டின் தலைநகரம் மற்றும் ஐரோப்பாவின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான புடாபெஸ்டில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது.
புடாபெஸ்ட் நகரின் மத்தியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரப் பூங்காவில் புதுமையான அருங்காட்சியகத்தை வடிவமைக்க வேண்டும் என்பதே போட்டியின் விதி.
சர்வதேச அளவில் நடைபெற்ற இவ்வடிவமைப்புப் போட்டியில் ஏராளமான முன்னணி கட்டிடக் கலை வடிவமைப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டன. போட்டியின் இறுதி முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டன. ஸ்னோஹட்டா மற்றும் சானா எனும் இரு கட்டிடக் கலை நிறுவனங்கள் முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன.
லட்விக் அருங்காட்சியகம் மற்றும் புதிய தேசிய கலைக் கூடம் இவ்விரண்டும் ஒரே கட்டிடத்தில் ஒருங்கிணைத்தார் போல நூதனமான வரைபடத்தை சமர்ப்பித்துள்ளன.

ஸ்னோஹட்டா ஆஸ்லோ, நார்வே மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் இயங்கும் நிறுவனமாகும். கிரேக் டைகர்ஸ் மற்றும் ஜெடில் தார்சனால் நடத்தப்படும் இக்கட்டிடக்கலை நிறுவனத்தில் கிட்டத்தட்ட நூறு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சிறந்த பண்பாட்டுக் கட்டிடங்களுக்கான உலகக் கட்டிடக் கலை விருதை இரு முறை வென்ற ஒரே நிறுவனம் ஸ்னோஹட்டா.
வடிவமைப்பில் பல புதுமைகளைப் படைத்துவரும் இந்நிறுவனம் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்போது தேசிய செப்டம்பர் 11 நினைவு அருங்காட்சியகத்தை வடிவமைத்து வருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த கசியோ செஜிமா எனும் பெண் கட்டிடக்கலை நிபுணரும் ரையி நிஷிசாவா என்பவரும் இணைந்து சானா நிறுவனத்தை 1995-ல் தொடங்கினார்கள். கடந்த 20 ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் தலை சிறந்த வீட்டு மனைகள், கல்விக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்களை வடிவமைத்து 2004-ல் கோல்டன் லையன், 2010-ல் ப்ரிட்ஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறார்கள்.
2010-ல் வெனீஸ் நகரில் நடைபெற்ற 12-வது சர்வதேசக் கட்டிடக் கலை கண்காட்சியை இயக்கினார் கசியோ செஜிமா. இதன் மூலம் வெனீஸ் கட்டிடக்கலை கூட்டமைப்பை நடத்திய முதல் பெண் எனப் புகழடைந்தார்.

இந்தப் போட்டியில் ஸ்னோஹட்டா மற்றும் சானா முன்வைத்த கட்டிடக் கலையின் தனித்துவம் எதுவெனில், நீங்கள் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அரும்பொருள்களைப் பார்வையிடலாம். அதே சமயம் கட்டிடத்தின் கூரை மேலும் ஏறிக்கொள்ளலாம். அதாவது கூரை முழுவதும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆகையால் நீங்கள் கூரையின் உச்சி மேல் ஏறிச் செல்ல முடியும்.
கூரையின் மேல் சவுகரியமாக உட்கார்ந்தபடி சுற்றும் முற்றும் உள்ள மரம், செடி கொடிகளைப் பார்த்து ரசிக்கலாம். ஆகவே உட்புற வடிவமைப்பில் அருங்காட்சியகமாகவும் வெளிப்புற வடிவமைப்பில் கேலரியாகவும் இக்கட்டிடம் விளங்கும்.
“தற்காலக் கட்டிடக் கலை நிபுணர்களால் 21-ம் நூற்றாண்டின் தேவையைக் கலை உணர்வோடு பூர்த்திச் செய்யும் முடியும் என்பதால்தான் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கட்டிடக் கலை நிபுணர்களை இப்போட்டிக்கு அழைத்தோம்” என இப்போட்டியின் நடுவர்களுள் ஒருவரான லாஸோ பான் கூறியிருக்கிறார்.
7,500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டிடம் உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகமாக இருக்கும். ஐரோப்பிய கலை அம்சங் களுடன் உருவாகவிருக்கும் இந்த அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் கவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கலை, கற்றல், பிரமிப்பு கலந்த கலவையாக இது இருக்கும். கடந்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது சிறப்பான கட்டிடக் கலைகள் தேர்வாகியுள்ளன. அடுத்து 2016-ல் கட்டுமானப் பணி தொடங்கும். அதைத் தொடர்ந்து 2018-ல் ஐந்து புதிய அருங்காட்சியகக் கட்டிடங்கள் புடாபெஸ்டின் நகரப் பூங்காவில் வீற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.