சொந்த வீடு

செல்ல விலங்குகளுக்காக ஓர் அலங்காரம்

கனி

உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியின் உருவப் படத்தை ஓவியமாகத் தீட்டி வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அந்த உருவப் படத்தை வைத்து உங்கள் செல்ல நாய்க்குட்டியை ஏமாற்றலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் உங்களுடைய இந்த வித்தியாசமான நாய் வளர்க்கும்முறை பிடிக்கும்.

நாய்களின் ஓவியங்களைப் போலவே நாய்களின் சிற்பங்களும் பிரபலமான அலங்காரப் பொருள்தான். இந்தச் சிற்பங்களை உங்களுக்குப் பிடித்த எந்த உலோகத்திலும் வாங்கலாம். வெண்கலம், பித்தளை, மரம், கல் என எல்லா வகையான நாய் சிற்பங்களும் கிடைக்கின்றன.

நம்முடன் நிஜவாழ்க்கையில் எப்படி எல்லாத் தருணங்களிலும் துணையாக இருக்கிறதோ, அதேமாதிரி வீட்டு அலங்காரத்திலும் எந்த இடத்தில் வைத்தாலும் நாய்ப் பொம்மைகள் வீட்டுக்கு அழகு சேர்க்கும். உட்புற அலங்காரம், வீட்டின் வெளியே தோட்ட அலங்காரம் என எங்கு வேண்டுமானாலும் நாய் அலங்காரத்தைப் பயன்படுத்தலாம்.

நாய்களின் ஓவியங்கள் மட்டுமல்லாமல் நாய்களை முன்னிலைப் படுத்தும் கலைப் பொருள்களை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம்.

இந்த அலங்காரத்தில் எந்த மீடியத்தில் வேண்டுமானாலும் நாய்களைப் பயன்படுத்தலாம். நாய்களின் வடிவங்கள் இருக்கும் சுவரொட்டிகள், நாய்களைப் பிரதிபலிக்கும் தரைவிரிப்புகள், நாய்களின் முகங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும் தலையணைகள், நாயின் முகம் வைத்த சுவர் கொக்கிகள், நாய் விளக்குகள் எனப் பலவகையாக நாய் அலங்காரத்தை வீட்டில் செய்யலாம்.

இந்த அலங்காரத்தைப் பார்த்தால் உங்கள் வீட்டின் செல்ல நாய்க்குட்டி நிச்சயமாக ஆச்சரியப்படும். இப்படி நாய்கள் மட்டுமல்லாமல் பூனைகள், பறவைகள் என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தும் உங்கள் வீட்டை அலங்கரிக்கலாம்.

மனிதர்களுக்கும், நாய்களுக்குமான அன்பின் ஆழத்தை அவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது. அந்த அன்பால்தான் நாய்களைப் பொம்மைகளை வைத்து அலங்கரிக்கும் வழக்கம் உருவானது. குகையில் காணப்படும் ஓவியங்களில் ஆரம்பித்து விக்டோரியா ஓவியங்கள், சிற்பங்கள் என நம் செல்லப் பிராணியின் தாக்கம் காலம்காலமாகத் தொடர்ந்துவருகிறது.

நாய்களைக் கலைப்பொருளாக வைத்து அலங்கரிக்கும் வழக்கம் விக்டோரியா காலகட்டத்தில்தான் பரவலாகத் தொடங்கியது. எட்வின் லாண்ட்சீர் (1802-1873) போன்ற ஓவியர்கள் நாயைப் பிரதானமாக வைத்து வரைந்த ஓவியங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய காலகட்டத்தில்தான் மிருகவதை தடைச்சட்டம் ஐரோப்பிய நாடுகளில் அமலுக்கு வந்தது. ராணி விக்டோரியா லாண்ட்சீர் வரைந்த 39 ஓவியங்களை வாங்கிப் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நாய்களை வீட்டில் வளர்ப்பது எவ்வளவு அழகான அனுபவமோ, அதே அளவுக்கு நாயைக் கருப்பொருளாக வைத்து வீட்டை அலங்கரிப்பதும் அழகான அனுபவமாக இருக்கும். நாய்களைக் கருப்பொருளாக வைத்து அலங்கரிப்பதற்கான சில வழிகள்...

உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியின் உருவப் படத்தை ஓவியமாகத் தீட்டி வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அந்த உருவப் படத்தை வைத்து உங்கள் செல்ல நாய்க்குட்டியை ஏமாற்றலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் உங்களுடைய இந்த வித்தியாசமான நாய் வளர்க்கும்முறை பிடிக்கும்.

SCROLL FOR NEXT