சொந்த வீடு

துபாயை மிஞ்சுகிறது மும்பை

செய்திப்பிரிவு

இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் உலகின் முக்கியமான வர்த்தக மையமான துபாயை ரியல் எஸ்டேட் துறையில் முந்துகிறது. நைட் ஃப்ராங் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை இதை வெளிப்படுத்துகிறது.

ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு துபாயில் 145 சதுர அடியில் வசதியான நிலத்தை வாங்கிவிட முடியும். அதே பணத்தைக் கொண்டு மும்பையில் 96 சதுர அடியில் சாதாரண நிலத்தைத்தான் வாங்க முடியும். அதாவது மும்பையில் ஒரு சதுர அடி நிலத்தை 61 ஆயிரத்து 83 ரூபாய்க்கு வாங்க முடியும். துபாயில் ஒரு சதுர அடியில் 40 ஆயிரத்து 235 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோதான் உலகத்தின் விலை உயர்வான நகரம். ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு 17 சதுர அடிதான் வாங்க முடியும். ஹாங்காங்கில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு 20 சதுர அடி வாங்கலாம். அதே தொகைக்கு லண்டனில் 21 சதுர அடி வாங்கலாம்.

பிரேசிலின் சாவ் பாலோ, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன், ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் உள்ளிட்ட 20 நகரங்கள் மும்பையைக் காட்டிலும் நில மதிப்பு குறைவான நகரங்கள் என அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT