சொந்த வீடு

குளிரூட்டும் டைல்ஸ்

செய்திப்பிரிவு

வெயில் காலம் தொடங்கி விட்டது. ஒவ்வொரு வெயில் காலமும் முந்தைய காலத்தைவிட கடுமையானதாக இருக்கிறது. வெயிலைத் தாக்குப் பிடிக்கும்படியாக நம்மையும் வீட்டையும் தயார்செய்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வெயிலிலிருந்து நம்மைச் சமாளித்துக்கொள்ள குடை பிடித்துக் கொள்வோம். நம் வீட்டுக்கு..?

அதற்காக வந்துள்ளதுதான் குளிர் டைல்ஸ். கட்டுமானத்துறைக்கு வந்துள்ள புதிய கட்டுமானப் பொருள்தான் இந்த வகை டைல்ஸ். வெயிலால் உருவாகும் உஷ்ணத்தை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்த வகை டைல்ஸ்களை மாடியின் மேற்புரத்தில் பதிப்பதன் மூலம் உஷ்ணத்தைக் குறைக்க முடியும்.

முன்பு வெளிநாடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்த, இந்த வகை டைல்ஸ்கள் இப்போது இந்தியாவிலும் தயாரிக்கப் படுகின்றன. இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டும் இவை தயாரிக்கப்படுகின்றன. இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன் கட்டிடத்தின் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற டைல்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றொரு நன்மையும் உண்டு. இது வீட்டை நன்றாகக் குளிர்விப்பதனால் மற்ற குளிரூட்டும் மின் சாதனங்களின் உபயோகத்தை ஓரளவு குறைக்க முடியும்.

SCROLL FOR NEXT