சொந்த வீடு

எல்லா விலையிலும் அபார்ட்மென்ட்

செய்திப்பிரிவு

மனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனையில் கவனம் ஈர்த்துவரும் ஓம்சக்தி ஏஜென்சிஸ் (மெட்ராஸ்) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரான ஆர். ராமச்சந்திரன், மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“மனை வாங்கும்போது மனைக்கு உண்டான பட்டா, சிட்டா போன்றவற்றையும் சரிபார்த்து வாங்க வேண்டும். அப்படியே மனையை வாங்கினாலும், ஒருவர் வீடு கட்டுவதற்குத் தொடங்கும்வரை மனையைப் பாதுகாப்பது பெரிய சவால்.

அந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் `கேட்டட் கம்யூனிட்டிஸ்’ திட்டங்களில் கவனம் செலுத்துகிறோம். இதற்காக ஓம்சக்தி ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் எங்கள் நிறுவனத்தின் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் சென்னையின் புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே 55 ஏக்கர் நிலப்பரப்பில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் அடங்கிய `ஓம்சக்தி எலீட்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். 600 சதுர அடியிலிருந்து 2,400 சதுர அடிவரை பல்வேறு அளவுகளில் (ஒரு சதுர அடி ரூ.797) விற்பனை செய்கிறோம்.

உலகின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தற்போது ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் அமைந்துவருகின்றன. இந்தப் பகுதிகள் சிறந்த தொழில் நகரங்களாக மாறிவரும் சூழ்நிலையில் இந்த இடத்துக்கு அருகில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி, நடுத்தர மக்களின் கனவை நனவாக்க முயன்றோம்.

அதற்கான மிக நவீன அம்சங்கள் நிறைந்த எங்களின் புதிய செயல்திட்டம்தான் எலீட்” என்ற அவர், அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு உகந்த வகையில் கட்டித் தருவதிலும் தன் நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பைக் கூறத் தொடங்கினார்.

“ஓம்சக்தி ஏஜென்சிஸ் லிமிமெட்டின் (OSAL) முழுமையான துணை நிறுவனமான சாந்தா பில்டு-டெக், அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள், நகரியங்கள், டியுப்ளக்ஸ் இரட்டை வீடுகள் மற்றும் பங்களாக்கள் ஆகியவை மீது கவனம் செலுத்தி வந்திருக்கிறது.

சாந்தா பில்டு-டெக் இப்போது ஒரு மிகப்பெரிய அமைவிடத்தின் கீழ் உங்களின் அனைத்துத் தனிப்பட்ட, பணி வாழ்வு சார்ந்த தேவைகளை ஒருங்கிணைக்க உலகத்தரம் வாய்ந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகம் ஒன்றை சாந்தா டவர்ஸ் என்ற பெயரில் வழங்குகிறது.

ஆவடி அருகே பருத்திப்பட்டில் அமைந்திருக்கும் சாந்தா டவர்ஸ் 4.57 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்டில்ட் 10 தளங்கள் கட்டமைப்பைக் கொண்ட மூன்று பிளாக்குகளில் மொத்தம் 508 அபார்ட்மெண்ட்களைக் கொண்டிருக்கும். 510-லிருந்து 1400 சதுர அடி வரை ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட்களை ரூ. 17 லட்சத்திலிருந்து ரூ.45 லட்சம் வரையிலான மதிப்பில் வழங்குகிறது.

இந்த அபார்ட்மெண்ட்களில் கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சிக் கூடம் மற்றும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வர்த்தக ரீதியிலான சில்லறை விற்பனையகங்களுக்கான இடவசதி எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார் ராமச்சந்திரன்.

- ஜே.

SCROLL FOR NEXT