சொந்த வீடு

தேனீர்க் கட்டிடம்

செய்திப்பிரிவு

வினோதமான உருவங்களில் கட்டிடங்களை ஒருவாக்குவது மேற்குலகில் இப்போது சகஜமான ஒன்றாகிவருகிறது. வாழ்விடங்களையும், பொதுவிடங்களையும் இப்படி உருவாக்கி வருகிறார்கள். அதுபோல ஆசிய நாடுகளிலும் வினோதக் கட்டிடங்களைப் பஞ்சம் இல்லைதான். சீனாதான் அதில் முன்னணியில் உள்ளது. வானுயர் கட்டிடங்களையும் ஆச்சரியம் தரும் வினோதக் கட்டிடங்களையும் அவர்கள் உருவாக்கிவருகிறார்கள்.

அந்த வகையில் தேநீர்க் கோப்பை வடிவில் ஒரு கட்டிடத்தை உருவாகி இருக்கிறார்கள். சீனாவில் மெய்டீன் என்னும் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம்தான் உலகின் மிகப் பெரிய தேநீர்க் கோப்பை வடிவக் கட்டிடம். இதன் உயரம் 73.8 மீட்டர். 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தக் கட்டிடம் மெய்டீன் நகர தேநீர் அருங்காட்சியகமாகும்.

SCROLL FOR NEXT