சொந்த வீடு

தேநீர் மேஜைகள்

செய்திப்பிரிவு

தேநீர் மேஜை இன்றைக்குப் பல வீடுகள் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குத் தேநீர் அல்லது பானங்கள் வழங்கி உபசரிக்கும் வழக்கம் நம்முடைய பண்பாட்டின் அம்சம். அப்படித் தேநீர் வழங்குவதற்காக இந்தத் தேநீர் மேஜை பயன்படுகிறது. சோஃபாக்களுக்கு நடுவில் நடு நாயகமாக இந்தத் தேநீர் மேஜை இருக்கும். முதன் முதலில் இங்கிலாந்தில் விக்டோரியா ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பிரான்ஸிலும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தத் தேநீர் மேஜைகளில் பல வகை உள்ளன. அவற்றில் சில:

தற்காலத் தேநீர் மேஜை

இந்த வகை மேஜை நவீனத் தோற்றத்துடன் மரம் அல்லது அக்ரிலிக், ஸ்டீல், கண்ணாடி போன்ற பொருட்களில் உருவாக்கப்படுகிறது. மரபான நான்கு கால்கள் அல்லாமல் பல விதமான வடிவங்களில் கிடைக்கிறது.

இந்தியத் தேநீர் மேஜை

இது இந்திய மேஜை பெரும்பாலும் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. அந்தக் காலகட்டத்தின் கலை நுட்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மேஜைகள் இருக்கும்.

ஓட்டமான் தேநீர் மேஜை

இந்த வகை மேஜை நவீனத் தோற்றத்துடனும் கிடைக்கிறது. தேநீர் மேஜைக்கு உள்ளேயே அமரும் சிறிய இருக்கை இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

வட்ட வடிவ மேஜை

இதுவும் மரபான மர வேலைப்பாடுகளுடனும் கிடைக்கின்றன. அது அல்லாமல் நவீன வடிவமைப்புடனும் கிடைக்கின்றன.

நாட்டுப்புற வடிவத் தேநீர் மேஜை

இந்த வகை மேஜை மரத்தை அதிக வேலைப் பாடுகள் அல்லாமல் அப்படியே பயன்படுத்துவது. மரம் அல்லாமல் கற்களைக் கொண்டும் இந்த வகை மேஜை அமைக்கப் படுகிறது.

பிரெஞ்சுத் தேநீர் மேஜை

இந்த வகை தேநீர் மேஜை மரத்தால் செய்யப்படுபவைதான். இது நான்கு கால்களைக் கொண்டதாக இருக்கும். அது சற்று வளைந்த வண்ணம் சிங்கத்தின் கால்கள் போல் இருக்கும். இந்த வகை மேஜை வீட்டுக்கு கம்பீரத் தோற்றத்தை அளிக்கும்.

SCROLL FOR NEXT