வணிக வளாகங்கள் கட்டுவது நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள முகலாயர் காலத்துக் கட்டிடமான செங்கோட்டையில் இம்மாதிரியான வர்த்தக வளாகத்தைக் காணலாம்.
சென்ட்ரல் வேர்ல்டு மால், தாய்லாந்து
இருபதாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் வானுயர் கட்டிங்களாக விஸ்வரூபம் எடுத்தன.
இம்மாதிரியான வணிக வளாகங்களில் சிறந்தவற்றைக் கட்டுமான இணைய இதழ் ஒன்று பட்டியலிட்டுள்ளது. இதில் சீனாவைச் சேர்ந்த நியூ செளத் சீனா என்னும் வணிக வளாகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அக்வோரியத்துடன் கூடிய துபாய் மால் என்னும் வணிக வளாகமும் இதில் இடம் பிடித்துள்ளது.
எஸ்.எம். சிட்டி நார்த் எட்ஸா மால், பிலிப்பைன்ஸ்
செவஹிர் மால், துருக்கி
துபாய் மால், ஐக்கிய அரபு நாடுகள்
கோல்டன் ரிசோர்ஸ் மால், சீனா