‘திஇந்து’ (தமிழ்) நாளிதழ் ‘சொந்த வீடு’ இணைப்பிதழ் சார்பாக நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில், ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் ஒரு பிரம்மாண்ட ‘ப்ராபர்டி எக்ஸ்போ’ (Property Expo), நடைபெற உள்ளது. கிரடாய் (சென்னை) தலைவர் திரு. சுரேஷ், ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. ரூபி மனோகரன் ஆகிய இருவரும் இந்த எக்ஸ்போவை தொடங்கிவைக்கிறார்கள். சரவணன்-மீனாட்சி தொலைக்காட்சித் தொடர் பிரபலங்களான திரு.செந்தில்குமார் - திருமதி ஸ்ரீஜா சந்திரன் தம்பதியர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
‘சொந்த வீடு’ இணைப்பிதழ் முதன் முறையாக நடத்தும் இந்தப் பிரம்மாண்ட வீட்டுக் கண்காட்சித் திருவிழாவில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. வீட்டு மனை, அடுக்குமாடி வீடுகள், தனி வில்லாக்கள் எனப் பலவிதமான ப்ராபர்டிகள் இந்த ஒரே நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. வீட்டு உள் அலங்கார நிறுவனங்களும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. வீட்டுக் கடன் தரும் வங்கிகளும் இந்தக் கண்காட்சியில் பங்குகொள்கின்றன.
முதல் முறையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் கலந்துகொள்ளும் கட்டுநர்கள் மற்றும் ப்ரமோட்டர்களுடன் வாசகர்கள் நேரடியாகக் கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கண்காட்சியில் ‘தி இந்து’ குழுமம் வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் 50%* தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
‘தி இந்து’ (தமிழ்), ஏற்கெனவே மாவட்டங்கள் தோறும் வாசகர் திருவிழாக்கள், பெண் இன்று மகளிர் திருவிழாக்கள், கொலு கொண்டாட்டங்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.