குண்டு துளைக்காத கண்ணாடிகளும் பொதுவாக ரகசிய வகையைச் சார்ந்தவை. மேலும், இந்த முறையில் ஒரு வகை மட்டும் பொதுவாக வழக்கத்தில் உள்ளது அவை லேமினேசன் எனப்படும் பல கண்ணாடிகளை ஒட்டி அதன் மூலமாக புல்லட்டைத் தடுப்பதாகும் இவ்வகைக் கண்ணாடிகள் 25மி.மீட்டரில் இருந்து கிடைக்கின்றன
ஒட்டுக் கண்ணாடி (Laminated Glass) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்ணாடித் தகடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டி உருவாக்கப்படும் கண்ணாடித் தகட்டைக் குறிக்கும். இது ஒரு வகைக் காப்புக் கண்ணாடி. இவ்வகைக் கண்ணாடியில் கண்ணாடித் தகடுகளுக்கு இடையே இடைப் படலம் எனப்படும் ஒட்டுவதற்கான படலம் இருக்கும். இப்படலம் பாலிவினைல் பியூட்டிரல் (polyvinyl butyral) எனப்படும் வேதிச் சேர்வையால் ஆனது. இதுவும் கண்ணாடியைப் போல் ஒளி ஊடுருவும்தன்மை கொண்டது.
இதனால் ஒட்டுக் கண்ணாடியின் ஒளியூடுருவும் தன்மை பாதிக்கப்படுவதில்லை. இந்த இடைப்படலம் கண்னாடித் தகடுகளை இறுக்கமாகப் பிணைத்து வைத்திருக்கும். கண்ணாடிகள் உடையும்போதும், அவற்றை விழவிடாமல் பிடித்து வைத்திருக்கக்கூடிய தன்மை கொண்டது. இதன் வலுவான ஒட்டும் தன்மை காரணமாக உடையும் கண்ணாடிகள் கூரிய விளிம்புகளுடன் கூடிய பெரிய துண்டுகளாக அல்லாமல் சிறு துண்டுகளாகவே உடைகின்றன. ஒரு புள்ளியில் தாக்கம் ஏற்படும்போது சிலந்திவலை வடிவில் வெடிப்புகள் ஏற்படுவதைக் காண முடியும்.
மனிதரால் அல்லது பிற வழிகளில் கண்ணாடிகள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ள இடங்களிலும் இந்த வகைக் கண்ணாடிகள் பயன்படுகின்றன. கூரைக் கண்ணாடிகள், கார்களில் பயன்படும் முகப்புக் கண்ணாடிகள் போன்றவை ஒட்டுக் கண்ணாடிகளாலேயே உருவாக்கப்படுகின்றன.
பெரிய அளவில் புயல் தாக்கங்கள் இருக்கக்கூடிய இடங்களில் கட்டிடங்களின் வெளிப்புறம் பயன்படும் பெரிய கண்ணாடித் தகடுகளுக்கு ஒட்டுக் கண்ணாடிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. பாலிவினைல் பியூட்டிரல் இடைப் படலம் கண்ணாடியின் ஒலியைக் குறைக்கக்கூடியது. அத்துடன் இப்படலம் 99% புறவூதாக் கதிர்களையும் தடுக்கவல்லது.
இந்தக் கட்டுரையில் நிச்சயமாக உங்களுக்குக் கண்ணாடிகளைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து இருக்கும். காலத்தில் கட்டிடங்களைக் கட்டும்போது முடிந்த வரை கண்ணாடிகளை உபயோகிக்கப் பாருங்கள் நீங்கள் வாங்கும் சிமெண்ட் ஜல்லி மணலை விட விலை குறைவுதான்.