சொந்த வீடு

பிரம்மாண்ட மழைத் துளி

செய்திப்பிரிவு

மழையைப் பாடாத கவிஞர்கள் இல்லை. அதன் ஒவ்வொரு துளியும் மகத்துவம் மிக்கது. கைகளுக்குள் சிக்காத துளிகள் இயற்கையின் ஓர் அற்புதமான வடிவம். இந்த அற்புதமான வடிவத்தில் ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

வானுயர் கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் ஒரு ரிசார்ட். கடல் கரையில் வானைத் தொடும் உயரத்தில் இந்தக் கட்டிடம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தக் கட்டிடம் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரைச் சேமிக்கிறது.

உலகிலேயே காற்றிலிருந்து மழை நீரைச் சேமிக்கும் ஒரே கட்டிடம் இதுதான் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இதன் புறச் சுவர் முழுவதும் மூடப்பட்டுள்ள சோலார் பேனல்களால் இந்தக் கட்டிடம் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்கிறது. மேலும் கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நுட்பமும் இந்தக் கட்டிடத்தில் உள்ளது. இந்தக் கட்டிடத்தின் உள்ளே உணவங்கள், தங்கும் விடுதிகள், ஜிம்கள், கண்காட்சி வளாகம், ஸ்பா சர்வீசஸ், கடல் காட்சியகம் எல்லாம் உள்ளன .

SCROLL FOR NEXT